For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நமக்கெல்லாம் ஒரு சூரியன்தான்.. ஆனால் இந்தப் புதிய கிரகத்திற்கு 2 சூரியன்!

Google Oneindia Tamil News

டெல்லி: விண்வெளி அதிசயத்தில் இதோ இன்னும் ஒரு பேரதிசயம். புதிய பெரிய கிரகம் ஒன்றை நாசா கண்டுபிடித்துள்ளது. இந்த புதிய கிரகத்திற்கு 2 சூரியன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேரிலான்ட் மாகாணம், கிரீன்பெல்ட் பகுதியில் உள்ள நாசாவின் கொடார்ட் விண்வெளி மையத்தைச் சேர்ந்த குழு ஒன்று இந்தப் புதிய கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளது. கலிபோர்னியாவின் சான்டியாகோ மாகாண பல்கலைக்கழக குழுவினருடன் இணைந்து இந்த கிரகத்தை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி உதவியுடன் இந்த கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கெப்ளர் 1647பி...

கெப்ளர் 1647பி...

இந்தப் புதிய கிரகத்திற்கு கெப்ளர் 1647பி என்றும் பெயரிட்டுள்ளனர். இது மிகப் பெரிய கிரகமாக உள்ளதாம். இதை வெறும் கண்ணால் பார்க்க முடியாது.

3700 ஒளியாண்டுகள் தொலைவில்...

3700 ஒளியாண்டுகள் தொலைவில்...

இந்தப் புதிய கிரகமானது, பூமியிலிருந்து 3700 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இது 4.4 பில்லியன் வருடங்களுக்கு முன்பு உருவாகியிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பூமி உருவான சமயத்தில் இதுவும் உருவாகியிருக்கிறது.

2 சூரியன்கள்...

2 சூரியன்கள்...

நமது சூரியனைப் போலே இதன் சூரியனும் உள்ளது. ஆனால் இங்கு இரண்டு சூரியன் உள்ளது. ஒன்று பரிதாக உள்ளது. இன்னொன்று சற்று சிறிதாக உள்ளது. ஜூபிடரின் நிறைக்கு சமமாக இதன் நிறையும் இருக்கலாம் என்று தெரிகிறது. இதுவரை கண்டபிடிக்கப்பட்ட கிரகங்களிலேயே இதுதான் மிகப் பெரியதாகும்.

3 வருடம்...

3 வருடம்...

இந்த கிரகமானது, இரு சூரியன்களையும் ஒருமுறை சுற்றவர எடுத்துக் கொள்ளும் காலம் 1107 நாட்களாகும். அதாவது மூன்று வருடத்திற்கும் சற்று மேலாகும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகாங்களிலேயே இததான் அதிக காலம் சுற்றி வரும் கிரகமாகும்.

ஆய்வுகள்...

ஆய்வுகள்...

இந்த கிரகம் விஞ்ஞானிகளிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இது குறித்த ஆய்வுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

English summary
In a new revelation, NASA has discovered a new planet that is also the largest planet that orbits two suns!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X