For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லேசர் ஆராய்ச்சி.. சந்திரயான் 2 மூலம் நாசா செய்ய போகும் ரிசர்ச்.. நிலவில் இறங்கும் முக்கிய பார்சல்

சந்திரயான் 2 உடன் நாசா ஆராய்ச்சி மையம் நிலவிற்கு ஆராய்ச்சி கருவி ஒன்றையும் அனுப்பி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சந்திரயான் 2ல் உள்ள லேண்டர் விக்ரம் உடன் தொடர்பு துண்டிப்பு

    டெல்லி: சந்திரயான் 2வுடன் நாசா ஆராய்ச்சி மையம் நிலவிற்கு ஆராய்ச்சி கருவி ஒன்றையும் அனுப்பி உள்ளது. சந்திரயான் 2வுடன் இந்த கருவிகளும் நிலவில் தரையிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இஸ்ரோவின் சந்திரயான் 2 விண்கலம் இன்னும் சற்று நேரத்தில் நிலவில் தரையிறங்க உள்ளது. சந்திரயான் 2ல் மூன்று முக்கிய சாதனங்கள் உள்ளது. ஆர்பிட்டர் எனப்படும் நிலவை அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்து ஆராயும் சாட்டிலைட் போன்ற கருவி ஒன்று.

    இது ஏற்கனவே நிலவின் வட்டப்பாதையை ஏற்கனவே சுற்றி வர தொடங்கிவிட்டது. நிலவில் இறங்கி அதை சோதனை செய்யும் பிரக்யான் என்று அழைக்கப்படும் ரோவர் ஒன்று. இந்த ரோவரை தரையிறக்க உதவும் விக்ரம் என்ற லேண்டர் கருவி ஒன்றும் உள்ளது.

    14 நாள்தான் ஆராய்ச்சி.. அதற்குள் எல்லாம் தெரிந்துவிடும்.. சந்திரயான் 2ல் உள்ள குட்டி ஹீரோ இதுதான்!14 நாள்தான் ஆராய்ச்சி.. அதற்குள் எல்லாம் தெரிந்துவிடும்.. சந்திரயான் 2ல் உள்ள குட்டி ஹீரோ இதுதான்!

    இன்னும் சில கருவிகள்

    இன்னும் சில கருவிகள்

    இது மட்டுமில்லாமல் மொத்தம் வேறு 10 பொருட்களையும் சந்திரயான் 2 நிலவிற்கு கொண்டு செல்கிறது. சந்திரயான் 2 ஐரோப்பாவில் இருந்து மூன்று, அமெரிக்கா மற்றும் பல்கேரியாவில் இருந்து இரண்டு கருவிகளை நிலவிற்கு கொண்டு செல்கிறது. இவை எல்லாம் நிலவில் தரையிறக்கப்படும். ஆனால் எல்லாம் மிக சிறிய கருவிகள் ஆகும்.

    லேசர்

    லேசர்

    இதில் நாசாவில் இருந்து சந்திரயான் 2 எல்ஆர்ஏ எனப்படும் (Laser Retroreflector Array (LRA)) கருவியை நிலவிற்கு கொண்டு செல்கிறது. நிலவில் நாசாவின் Laser Retroreflector Array (LRA) கருவி ஏற்கனவே சில இருக்கிறது. நாசாவின் அப்போலோ மூலம் ஏற்கனவே Laser Retroreflector Array (LRA) கருவிகள் சில நிலவில் பொருத்தப்பட்டுள்ளது.

    ஏன் இது

    ஏன் இது

    Laser Retroreflector Array (LRA) என்பது லேசர் கண்ணாடி போன்ற கருவியாகும். இது நிலவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலையாக வைக்கப்படும். அதன்பின் பூமியில் இருந்து அந்த கண்ணாடியை நோக்கி லேசர் கதிர்கள் அனுப்பப்படும். அந்த லேசர் கதிர் செல்லும் தூரத்தை வைத்து நிலவின் ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரம் கண்டுபிடிக்கப்படும்.

    மீண்டும்

    மீண்டும்

    தற்போது சந்திரயான் 2 மூலம் மேலும் இரண்டு Laser Retroreflector Array (LRA) கருவிகள் நிலவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. சந்திரயான் 2 நிலவின் தென் துருவத்திற்கு செல்கிறது. அந்த பகுதிக்கும் பூமிக்கும் இடையில் இருக்கும் தூரம் துல்லியமாக தெரியாது. இதை கண்டுபிடிக்கவே தற்போது நாசா சந்திரயான் 2 உடன் Laser Retroreflector Array (LRA) கருவியை அனுப்பி உள்ளது.

    என்ன ஆராய்ச்சி

    என்ன ஆராய்ச்சி

    அதே சமயம் நிலவின் தூரம் மட்டுமில்லாமல் நிலவில் இருக்கும் மூலக்கூறுகளையும் இந்த லேசர் கருவி வைத்து நாசா ஆராய இருக்கிறது. அதேபோல் சந்திரயான் 2 கொண்டு செல்லும் மற்ற சில கருவிகளும் நிலவில் பல்வேறு வகையான ஆராய்ச்சிகளை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Nasa's laser equipment also bought to the moon with Chandrayaan-2's lander.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X