For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மறக்க முடியுமா..?: நாடாளுமன்ற தாக்குதல் நடந்த 12ம் ஆண்டு இன்று!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்ற தாக்குதலின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி மலரஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ந் தேதி நாடாளுமன்றத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இத் தாக்குதல் நடத்தப்பட்டதன் 12வது நினைவு நாள் இன்று நாடாளுமன்றத்தில் கடைபிடிக்கப்பட்டது. உயிரிழந்த பாதுகாப்புப் படையினர் 12 பேருக்கு நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Nation remembers Parliament attack martyrs

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சபாநாயகர் மீரா குமார், எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

English summary
Prime Minister Manmohan Singh in Delhi on Friday paid tributes to the martyrs of the 2001 attack on the Parliament House.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X