For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய பல்கலை கழகங்களில் 207 அடி உயர கம்பத்தில் தேசியகொடி பறப்பது கட்டாயம்: ஸ்மிருதி இராணி

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும் 207 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை பறக்க விடுவது கட்டாயமாக்கப்படுகிறது என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணி தலைமையில் டெல்லியில் அவசர கூட்டம் நடந்தது. இதில் இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் கலந்து கொண்டனர்.

National Flag to fly high at all Central Universities - HRD Minister Smriti Irani

அப்போது ஹைதரபாத் தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை சம்பவம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடந்து வரும் மாணவர் போராட்டம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும் மூவர்ணக் கொடியை பறக்கவிடுவது கட்டாயம் ஆக்கப்படுகிறது என அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்தார். மேலும் டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ளது போல் 207 அடி உயர கம்பத்தில் பறக்க விடுவது எனவும் அதேபோல் தேசியக் கொடியின் அளவும் வரை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டதும், தேசப்பற்று மற்றும் தேச விரோதம் தொடர்பாக போராட்டங்களும், கருத்து மோதல்களும் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தேசியக் கொடியை பறக்கவிடுவதன் மூலம் மாணவர்களிடம் தேசப்பற்றை அதிகரிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

English summary
HRD Minister Smriti Irani on Thursday said, National Flag to fly high at all Central Universities
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X