For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்கிரசுக்கு ஒரு வருடத்தில் நன்கொடையாக கிடைத்த வருவாய் ரூ.600 கோடி! கடைசி இடத்தில் கம்யூனிஸ்ட்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளுக்கு வரும் நன்கொடைகளில் 22 சதவீத மதிப்புக்குத்தான் பெரிய அளவிலான டொனேஷன்கள் என்றும், சுமார் 57 விழுக்காடு நன்கொடைகள், கூப்பன்கள் மூலமாக கிடைத்த சிறிய டொனேஷன்கள் மூலம் பெறப்பட்டவை என்றும் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஜனநாயக சீரமைப்புக்கான சங்கம் (ஏடிஆர்) அமைப்பு நடத்திய ஆய்வில்தான் இத்தகவல் தெரியவந்துள்ளது.

5 கட்சிகள்

5 கட்சிகள்

இந்திய தேசிய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய 5 கட்சிகளின் 2013-14ம் நிதியாண்டு வருவாயை ஆய்வு செய்து இந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

57 சதவீதம் சிறு டொனேஷன்

57 சதவீதம் சிறு டொனேஷன்

அதில், 57 சதவீத வருவாய், சிறு டொனேஷன்கள் மூலமும், 22 சதவீத வருவாய் பெரிய அளவிலும் கிடைத்துள்ளதை உறுதி செய்துள்ளது. பாஜக தனது வருவாய் விவரத்தை இன்னும், தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவில்லை என்பதால் அக்கட்சி விவரத்தை இந்த அமைப்பு வெளியிட முடியவில்லை.

காங்கிரஸ் வருவாய்

காங்கிரஸ் வருவாய்

மேற்கண்ட ஐந்து கட்சிகளின் கடந்த நிதியாண்டு வருவாய் ரூ.844.71 கோடியாகும். இதில், காங்கிரஸ் கட்சியின் வருவாய் மட்டும் ரூ.598.06 கோடியாகும். ஐந்து கட்சிகளில், காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே 70 சதவீத வருவாய் கிடைத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஸ் கட்சி ரூ.121.87 கோடி வருவாயுடன் 2வது இடத்திலுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கடைசி

இந்திய கம்யூனிஸ்ட் கடைசி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வருவாய் ரூ.2.43 கோடி மட்டுமே என்பதால், அது இப்பட்டியலில் கடைசி இடத்திலுள்ளது. தேசிய கட்சிகளின் மொத்த வருவாயில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வருவாய் 0.29 சதவீதம் மட்டுமேயாகும். காங்கிரஸ் கட்சிக்கு கூப்பன்கள் மூலம் கிடைத்த வருவாய் மதிப்பு ரூ.477 கோடி. தேசியவாத காங்கிரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.8.32 கோடிகளாகும்.

English summary
Nearly 57 per cent of total income of five national parties during financial year 2013-14 was from sale of coupons (smaller donations), a leading election watchdog NGO has said. "Bigger donations formed 22 per cent of the income of the parties," said Association for Democratic Reforms (ADR), based on the data collected from Election Commission of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X