For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியீடு.. 19 லட்சம் பெயர்கள் நீக்கம்.. அசாமில் பதற்றம்.. போலீஸ் குவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Assam NRC final list 2019

    டெல்லி: அசாம் மாநில மக்களின் குடியுரிமையை உறுதி செய்யும் தேசிய குடிமக்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 19 லட்சம் பேரின் பெயர்கள் இல்லை என்பதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

    வங்கதேசத்தில் இருந்து ஏராளமானோர் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். மேலும் அரசு அறிவிக்கும் அத்தனை திட்டங்களையும் இந்திய மக்களை காட்டிலும் இவர்களே பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்தன. மேலும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் இருந்து வருவதாக புகார்கள் எழுந்தன.

    மற்ற நாடுகளில் அந்த நாட்டினருக்கு மட்டுமே சலுகைகள் வழங்கும் நிலையில் இந்தியாவில் மட்டும் உள்நாட்டு சலுகைகளை வெளிநாட்டினர் அனுபவித்து வருவதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.

    விறுவிறுன்னு தயாராகும் விநாயகர் சிலைகள்.. கன்னியாகுமரியில் கோலாகலமாக தயாராகும் கணேசர்கள்விறுவிறுன்னு தயாராகும் விநாயகர் சிலைகள்.. கன்னியாகுமரியில் கோலாகலமாக தயாராகும் கணேசர்கள்

    அடையாளம் காண

    அடையாளம் காண

    இதையடுத்து அசாம் மாநில மக்களின் குடியுரிமையை உறுதி செய்யும் வகையிலும் வங்கதேசம்அண்டை நாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்களை அடையாளம் காணவும் தேசிய குடிமக்கள் இறுதி பட்டியல் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி வெளியானது.

    3.11 கோடி பெயர்கள்

    3.11 கோடி பெயர்கள்

    ஆனால் அதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுப்பட்டன. இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி மறுபட்டியல் இன்று வெளியானது. இதில் 19,06,657 லட்சம் பேரின் பெயர்கள் விடுப்பட்டுள்ளது. மொத்தம் 3.11 கோடி பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    வெளியேற்றம்?

    வெளியேற்றம்?

    19 லட்சம் பெயர்கள் விடுபட்டுள்ளதால் அசாம் மாநிலத்தில் கலவரம் வெடிக்கும் என்பதால் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் அசாமிலிருந்து வெளியேற்றப்படுவார்களா இல்லை மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுமா என எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

    வெளிநாட்டு தீர்ப்பாயம்

    வெளிநாட்டு தீர்ப்பாயம்

    இதுகுறித்து அரசு கூறுகையில் , 19 லட்சம் பேர் தாங்கள் இந்திய குடிமக்கள் என்பதற்கான ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்கவில்லை. எனவே இந்த குடிமக்கள் பட்டியலில் விடுபட்டுள்ளோர் இந்திய குடியுரிமையை நிரூபிக்க வெளிநாட்டு தீர்ப்பாயத்தில் முறையிடலாம் என கூறப்பட்டுள்ளது.

    English summary
    Government has released National Residential Certificate which ensures that the person resides in Assam is Indian citizen.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X