For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking News: காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு உறுப்பினர்கள் அறிவிப்பு!

ஜம்மு காஷ்மீரில் நேற்று இரவோடு இரவாக தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவின் உறுப்பினர்களை மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

cauvery

Newest First Oldest First
8:37 PM, 22 Jun

இயக்குநர் பாரதிராஜா மீது வழக்குப் பதிவு

திருவல்லிக்கேணி போலீஸ் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு

8:34 PM, 22 Jun

புழல் சிறையில் இருந்த 79 விசாரணை கைதிகள் விடுதலை
7:18 PM, 22 Jun

மத்திய நீர்வள ஆணைய பொறியாளர் நவீன் தலைமையில் காவிரி ஒழுங்காற்று குழு
7:05 PM, 22 Jun

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம்
7:05 PM, 22 Jun

காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு

மத்திய நீர்வள ஆணைய தலைவர் மசூத் ஹுசைன் தலைமையில் ஆணையம்

6:46 PM, 22 Jun

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அங்கீகாரம்

கமல் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தது

6:41 PM, 22 Jun

ஓமலூர் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன்

அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டியதாக சீமான் மீது வழக்கு

சீமானுக்கு சேலம் நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்தது

6:32 PM, 22 Jun

கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க பிரதமர் மோடி மறுப்பு

பிரதமர் மோடியை சந்திக்க 4-வது முறையாக பினராயி விஜயனுக்கு அனுமதி மறுப்பு

5:25 PM, 22 Jun

டெல்லியில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் போராட்டம்

பாலக்காடு ரயில் பெட்டி தொழிற்சாலையை கைவிட்டதற்கு எதிர்ப்பு

ரயில்வே அலுவலகம் முன் கேரளா முதல்வர் போராட்டம்

5:10 PM, 22 Jun

பெண்ணாடத்தில் மூதாட்டி அடித்து கொலை

குழந்தை கடத்த வந்தவர் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்

பொதுமக்கள் தாக்கியதில் 60 வயது மூதாட்டி லட்சுமி அம்மாள் மரணம்

4:54 PM, 22 Jun

தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத இனி வெளிமாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்படாது

பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு கொண்டுவரும் திட்டம் இல்லை

தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

சென்னையில் மத்திய அமைச்சர் ஜவடேகர் உறுதி

4:53 PM, 22 Jun

செய்யூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு

மேல்மருவத்தூர் அருகே செய்யூரில் 2-வது சர்வதேச விமான நிலையம்

செய்யூர் அருகே 3 கிராமங்களில் 3,000 ஏக்கர் நிலம் தேர்வு

விளைநிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் காஞ்சிபுரம் ஆட்சியரிடம் எதிர்ப்பு

2:59 PM, 22 Jun

நடிகர் மன்சூர் அலிகானின் ஜாமீன் மனு தள்ளுபடி

மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சேலம் ஓமலூர் நீதிமன்றம்

8 வழிசாலை திட்டம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறியதால் மன்சூர் அலிகான் கைது

பியூஷ் மானூஷுக்கு ஜாமீன் வழங்கியது ஓமலூர் நீதிமன்றம்

2:11 PM, 22 Jun

விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் நாளைய முதல்வர் என விளம்பரபடுத்தியுள்ளனர் மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி
2:06 PM, 22 Jun

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: விசாரணை ஆணையத்திற்கு தடையில்லை-ஹைகோர்ட்

துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி அரசு விளக்கம் அளிக்கவும் ஹைகோர்ட் உத்தரவு

1:40 PM, 22 Jun

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

கடல் சீற்றத்துடன் இருக்கும், 4.6 மீ வரை அலைகள் எழும்பும் - வானிலை மையம்

மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் - வானிலை மையம்

1:00 PM, 22 Jun

உயர்மட்ட அதிகாரிகளிடையே கொள்கை முடிவு எடுத்த பின்னரே அரசாணை

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வைகோ வழக்கில் தமிழக அரசு பதில்

12:55 PM, 22 Jun

ஸ்டெர்லைட் ஆலை கொள்கை முடிவு எடுத்துதான் மூடப்பட்டுள்ளது - தமிழக அரசு
12:36 PM, 22 Jun

ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள்- பள்ளியில் கல்வி அதிகாரி ஆய்வு

வெளியகரம் அரசுப்பள்ளியில் கல்வி அதிகாரி அருட்செல்வன் ஆய்வு

ஆசிரியர்கள், மாணவர்களிடம் கல்வி அதிகாரி அருட்செல்வன் விசாரணை

11:49 AM, 22 Jun

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: சென்னையில் சட்டசபை முற்றுகை போராட்டம்

இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் பேரணி

சேப்பாக்கத்தில் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தியது காவல்துறை

11:05 AM, 22 Jun

வேளாண் படிப்பு ரேங்க் பட்டியல் வெளியீடு

முதல் 10 இடங்களில் 8 இடங்களை மாணவிகள் பிடித்தனர்

ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஆர்த்தி 200க்கு 200 மதிப்பெண்கள்

10:32 AM, 22 Jun

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

துப்பாக்கி சண்டையில் 1 போலீஸ்காரர் வீர மரணம்

9:47 AM, 22 Jun

சென்னை ஐபிஎல் போராட்டத்தின் போது போலீஸாரைத் தாக்கிய மதன்குமார் கைது

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதன்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

9:19 AM, 22 Jun

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பரபரப்பு குற்றம்சாட்டிய நீதிபதி செல்லமேஸ்வர் இன்று ஓய்வு
9:11 AM, 22 Jun

ஜம்மு காஷ்மீரில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் குவிப்பு

இரவில் இருந்து சிறப்பு கமாண்டோ படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்

ஸ்னைப்பர் துப்பாக்கி, ரேடார் கருவிகளுடன் வீரர்கள் குவிப்பு

எல்லை பகுதியில் கூடுதல் வீரர்களை நிறுத்த உள்துறை அமைச்சகம் முடிவு

பயங்கரவாதிகளை ஒழிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தும் - ராஜ்நாத் சிங்

9:11 AM, 22 Jun

லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

கடந்த 18ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்

டீசல் விலை விலை ஏற்றத்தை கண்டித்து போராட்டம் நடத்தினார்கள்

மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்ததை அடுத்து போராட்டம் வாபஸ்

லாரி உரிமையாளர்களுடன் அமைச்சர் நிதின் கட்கரி 27ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துகிறார்

9:11 AM, 22 Jun

நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்

ரிக்டர் அளவுகோலில் 5.0 என பதிவு

அதிகாலை 1.59 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

9:10 AM, 22 Jun

எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க வேண்டிய அவசியமில்லை - ஸ்டாலின்

எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்க வேண்டியதில்லை - ஸ்டாலின்

அப்படி செய்தால் திமுக மீது மக்கள் வைத்துள்ள மரியாதை போய்விடும் - ஸ்டாலின்

திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி

9:10 AM, 22 Jun

காஷ்மீரில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஆளுநர் வோரா அழைப்பு

காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகிறது

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும்

English summary
National Security force reaches Kashmir amidst blow in government. Central government call for more security in the Border area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X