For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக அணி 234-246; காங்கிரஸ் அணி 111-123 இடங்களைக் கைப்பற்றும்: சி.என்.என். ஐ.பி.என் சர்வே

By Mathi
|

டெல்லி: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 234 முதல் 246 இடங்களைக் கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 111 முதல் 123 இடங்களைக் கைப்பற்றும் என்றும் சி.என்.என்.- ஐ.பி.என். கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக பல மாநிலங்களின் நிலவரங்களை கடந்த சில நாட்களாக சி.என்.என்.- ஐ.பி.என். தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி பிரதமராக 46%பேர்தான் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் இந்த கருத்து கணிப்பு கூறியது.

இந்நிலையில் நேற்று தேசிய அளவில் முடிவுகள் எப்படி இருக்கும் என்றும் சி.என்.என்.- ஐ.பி.என். கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் பாஜக அணிதான் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 234-246

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 234-246

லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 234 முதல் 246 இடங்கள் வரை கிடைக்கும்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 111-123

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 111-123

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 111-123 தொகுதிகள் கிடைக்குமாம்.

பாஜகவுக்கு 206-218

பாஜகவுக்கு 206-218

பாஜக தனித்து 206 முதல் 218 இடங்களைக் கைப்பற்றும் என்கிறது கருத்து கணிப்பு.

காங்கிரஸுக்கு 94-106

காங்கிரஸுக்கு 94-106

காங்கிரஸ் கட்சிக்கு 94 முதல் 106 இடங்கள் வரை கிடைக்குமாம்.

திரிணாமுல், அதிமுக அதிக இடங்கள்..

திரிணாமுல், அதிமுக அதிக இடங்கள்..

மாநிலக் கட்சிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 23 முதல் 29 இடங்களிலும் அதிமுக 15 முதல் 21 இடங்கள் வரை கைப்பற்றுமாம்

இடதுகளுக்கு 20

இடதுகளுக்கு 20

இடதுசாரிகக் கட்சிகளுக்கு ஒட்டுமொத்தமாக 14 முதல் 20 தொகுதிகள் தான் கிடைக்க வாய்ப்பிருக்கிறதாம்.

தெலுங்குதேசம், சமாஜ்வாடி

தெலுங்குதேசம், சமாஜ்வாடி

இதற்கு அடுத்து தெலுங்குதேசம் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் இடம்பிடிக்கின்றன. இந்த கட்சிகளுக்கு முறையே 13 முதல் 19 தொகுதிகளும், 11 முதல் 17 தொகுதிகளும் கிடைக்கும்.

திமுகவுக்கு 10-16

திமுகவுக்கு 10-16

திமுக கூட்டணிக்கு 10 முதல் 16 இடங்களும் இதே அளவில் ஒடிஷாவின் பிஜூ ஜனதா தளம் மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் கிடைக்குமாம்.

ஒய்.எஸ்.ஆர், டி.ஆர். எஸ்

ஒய்.எஸ்.ஆர், டி.ஆர். எஸ்

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 9 முதல் 15 இடங்களும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு 4 முதல் 8 இடங்களும் கிடைக்குமாம்..

ஆம் ஆத்மிக்கு 4-8

ஆம் ஆத்மிக்கு 4-8

லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு 4 முதல் 8 தொகுதிகளில்தான் வெற்றி கிடைக்குமாம்.

English summary
The Bharatiya Janata Party-led National Democratic Alliance (NDA) is almost certain to form the next government according to CNN-IBN-CSDS-Lokniti-The Week national election tracker. The NDA is projected to get 234-246 Lok Sabha seats in the elections while the Congress-led United Progressive Alliance (UPA) is likely to bag just 111-123 according to the projections by Chennai Mathematical Institute Director Rajeeva Karandikar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X