For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவின் முதல் திருநங்கை கல்லூரி முதல்வர் மனாபி ராஜினாமா!

மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தில் உள்ள கிரிஷ்நகர் பெண்கள் கல்லூரியில் பணியாற்றி வந்த மனாபி பண்டோபாத் யாய் என்ற திருநங்கை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் கல்லூரி முதல்வராக பணியாற்றி வந்த திருநங்கை மனாபி பந்தோபாத்யாய் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மேற்கு வங்கத்தில் விவேகானந்தா சடோபார்ஷிகி மகாவித்யாலா கல்லூரியில், பெங்காலி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் மனாபி. இவர் கடந்த 2015ம் ஆண்டு நாடியா மாவட்டத்தில் உள்ள கிரிஷ்நகர் பெண்கள் கல்லூரி முதல்வராக தேர்வானார். அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Nations first transgender college principal resigns

இந்தியாவிலேயே முதல் முறையாக திருநங்கை ஒருவர் கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்டிருந்தது மேற்கு வங்கத்தில் தான். இந்நிலையில் பொறுப்பு ஏற்ற 19 மாதங்களில் கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவிகளின் ஒத்துழைப்பு கிடைக்காததால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக மனாபி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், புதுப்பெண்ணைப் போன்ற நிலையில் இருப்பதாக நினைக்கிறேன். திருமணமாகி வீட்டுக்கு வரும் புதுப்பெண்ணை வரவேற்பதும், ஒரு வருடத்துக்குப் பிறகு, அவளை கொடுமை செய்து எரித்துக் கொள்வார்கள். தொடர்ச்சியான போராட்டங்களால் நான் சோர்வடைந்துவிட்டேன். ஏராளமான நம்பிக்கையோடு உள்ளே வந்தேன். தற்போது தோற்றுவிட்டதாக உணர்கிறேன் என்று வருத்தத்தோடு கூறியுள்ளார்.

நைஹதியில் மரபான வங்காள நடுத்தர குடும்பத்தில் பிறந்த மனோபி பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் ஆவார். இவருக்கு திபாஷிஷ் என்ற வளர்ப்பு மகன் ஒருவரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
India's first transgender college principal Manabi Bandopadhyay has submitted her resignation after about one-and-a-half years in office,expressing frustration at "non-cooperation" from a section of teachers and students of her institution.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X