For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர் பிரச்சினையை தவறாக கையாண்டதால் கொலை செய்யப்பட்டார்... ராஜீவ் மீது நட்வர்சிங் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

டெல்லி: அமைச்சரவையுடன் ஆலோசனை நடத்தாமல், இலங்கைக்கு படைகளை அனுப்பினார், இலங்கை பிரச்சினையை தவறாக கையாண்டர், அதனாலேயே அவர் கொல்லப்பட்டார் என முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குறித்து பரபரப்புத் தகவல்களை தெரிவித்துள்ளார் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங்.

காங்கிரஸ் தலைமைக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவராக கருதப்பட்டவர் 83 வயது நட்வர் சிங். இவர் கடந்த 2008-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக கட்சியை விட்டு வெளியேறினார். ஒரு வாழ்க்கை போதாது' என்ற தலைப்பில் தனது சுய சரிதையையை இன்று வெளியிட உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில், கடந்த 2004ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா பிரதமராவதை, ராகும் தடுத்ததாக பரபரப்புத் தகவலைத் தெரிவித்திருந்தார். மேலும், தான் சுயசரிதை எழுதப்போகும் விவரமறிந்து சோனியா தரப்பு, இது தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதாகக் கூறியிருந்தார்.

இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், தான் சுயசரிதை எழுதினால் உண்மை வெளிவரும் என சோனியா பேட்டியளித்தார்.

இந்நிலையில், நேற்று செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை குறித்து பல பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார் நட்வர் சிங். அப்பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது:-

தவறான அணுகுமுறை...

தவறான அணுகுமுறை...

இலங்கை பிரச்சினையை தவறாக கையாண்டதுதான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக்கு வழிவகுத்து விட்டது. இலங்கை பிரச்சினையில், அவருக்கு தவறான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இலங்கை பிரச்சினையை எளிதாக தீர்த்து விடலாம் என்று அவர் கருதினார்.

பிரபாகரனை சந்தித்தார்...

பிரபாகரனை சந்தித்தார்...

அவர் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை ரகசியமாக சந்தித்தார். ராஜீவ் காந்தி, அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி அல்ல. அவர் பிரபாகரனை நம்பினார். ஆனால், பிரபாகரன் அவரை ஏமாற்றி விட்டார்.

ஆலோசிக்கவில்லை...

ஆலோசிக்கவில்லை...

மத்திய அமைச்சரவையுடன் கலந்தாலோசனை நடத்தாமலேயே, இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை ராஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். ஆனால் இலங்கையில் செய்ய வேண்டிய பணி குறித்து இந்திய அமைதிப்படை எந்தவகையிலும் தயாராகவில்லை.

வேறுபட்ட கொள்கைகள்...

வேறுபட்ட கொள்கைகள்...

மேலும், இலங்கை பிரச்சினை பற்றிய இந்திய கொள்கையில் இணக்கம் இல்லை. அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., தமிழ்நாட்டுக்கென ஒரு கொள்கையை வைத்திருந்தார். மத்திய அரசு தனக்கென ஒரு கொள்கையை வைத்திருந்தது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Rajiv Gandhi, during his tenure as prime minister in 1987, gave orders to send Indian troops to Sri Lanka without consulting his Cabinet colleagues or top officials, former external affairs minister Natwar Singh said in an interview to Headlines Today on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X