For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்த முறையும் ஒடிசாவில் பாஜகவுக்கு அடிதான்.. நவீன் பட்நாயக் கிங்.. வெளியான பரபரப்பு சர்வே

Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு மீண்டும் அடிதான் காத்திருக்கிறது என்கிறது லேட்டஸ்ட் சர்வே.

2014ம் ஆண்டு, லோக்சபா தேர்தலின்போது, மோடி அலையையும் தாக்குப்பிடித்த மாநிலங்களில், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம்போல, ஒடிசாவும் ஒன்று. பிஜு ஜனதாதளத்திற்குதான் வெற்றியை வாரி வழங்கினர் அம்மாநில மக்கள்.

21 லோக்சபா தொகுதிகளை கொண்ட ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக்கின், பிஜு ஜனதாதளம் 20 தொகுதிகளை அலேக்காக வாரி சுருட்டியது. ஆனால், ஒடிசாவையும், பாஜக கோட்டையாக மாற்றிவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மிகவும் மெனக்கெட்டு சுற்றுப் பயணங்கள் செய்து வருகிறார்.

பூரண மதுவிலக்கு, சீமை கருவேல மரங்கள் அழிப்பு... மதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியீடுபூரண மதுவிலக்கு, சீமை கருவேல மரங்கள் அழிப்பு... மதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியீடு

மோடி ஆசை

மோடி ஆசை

கடந்த சில மாதங்களில் மோடி நிறைய முறை ஒடிசாவுக்கு சுற்றுப் பயணம் செய்தார். மேலும், அம்மாநிலத்தின் பூரி தொகுதியில் இருந்து போட்டியிடவும், மோடி திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகின.

சர்வே

சர்வே

இந்த நிலையில், 'போல் ஐஸ்' (poll eyes), என்ற அமைப்பு நடத்திய சர்வேயில், பிஜு ஜனதாதளம் 18 தொகுதிகளை வெல்லும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக 2 தொகுதிகளையும், காங்கிரஸ் 1 தொகுதியையும் வெல்லும் வாய்ப்புள்ளதாகவும் அந்த சர்வே மேலும் தெரிவிக்கிறது.

அசைக்க முடியாது

அசைக்க முடியாது

ஒடிசா என்றாலே, பிஜு ஜனதாதளம் அசைக்க முடியாத சக்திதான் என்பது, இந்த சர்வேயிலும் நிரூபணமாகியுள்ளது. அக்கட்சி 50 சதவீதத்திற்கும் மேலான வாக்கு வங்கியை பெற்றுள்ளதாக இந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒடிசாவை பிஜு ஜனதாதளம் ஸ்வீப் செய்யப்போவது உறுதியாகிவிட்டது.

பிற கட்சி தலைவர்

பிற கட்சி தலைவர்

பிஜு ஜனதாதளம் வீக்காக இருக்கும் தொகுதிகள் கென்ஜிகார், சம்பல்பூர் மற்றும் கோராபுட் ஆகியவையாகும். இதில் கோராபுட் மீது பாஜகவுக்கு மிகுந்த நம்பிக்கை. இதற்கு காரணம், முன்னாள் முதல்வரும், 8 முறை காங்கிரசிலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான, கிரிதர் கமங் இப்போது, பாஜகவில் இருப்பதுதான்.

English summary
Odisha is one of the few states that withstood the Narendra Modi wave in 2014, mainly due to the towering popularity of Odisha Chief Minister Naveen Patnaik whose Biju Janata Dal (BJD) won 20 out of 21 Lok Sabha seats in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X