For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

5ஆவது முறையாக மீண்டும் முதல்வராகிறார் ஒடிஸாவின் நவீன் பட்நாயக்.. ஆனால் லோக்சபாவில் பேரிடி!

Google Oneindia Tamil News

புவனேஸ்வரம்: 5-ஆவது முறையாக ஒடிஸா மாநிலத்தின் முதல்வராவார் நவீன் பட்நாயக் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதே வேளையில் அந்த மாநிலத்தில் கடந்த லோக்சபா தேர்தலைவிட அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்ற பகீர் கருத்தும் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுடன் சில மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலும் நடந்து முடிந்தது. இதில் ஒடிஸாவுக்கு 147 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த முறை நடந்த தேர்தலில் ஆட்சியில் இருக்கும் பிஜூ ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ் , பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.

ஒடிஸாவில் தொடர்ந்து 4 முறை முதல்வராக உள்ள பிஜு ஜனதா தளம் கட்சியை வீழ்த்த பாஜக பெரும் முயற்சி எடுத்து வந்தது. பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது நவீன் பட்நாயக்கிற்கு ஒடிய மொழி தெரியாது. எனவே அந்த மொழி தெரியாத ஒருவர் எப்படி உங்களின் குறைகளை கேட்பார் என கேள்வி எழுப்பியிருந்தார்.

சட்டசபை தேர்தலில் 'கை' கொடுத்த ராஜஸ்தான், ம.பியில் காங்கிரஸுக்கு சிங்கிள் டிஜிட்தானாம்! சட்டசபை தேர்தலில் 'கை' கொடுத்த ராஜஸ்தான், ம.பியில் காங்கிரஸுக்கு சிங்கிள் டிஜிட்தானாம்!

கருத்து கணிப்புகள்

கருத்து கணிப்புகள்

அதுபோல் அந்த மாநிலத்தில் மொத்தம் 21 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதிலும் எப்படியாவது பிஜேடியை வீழ்த்த வேண்டும் என பாஜக போராடியது. இந்த நிலையில் இந்த மாநிலத்துக்காக சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன.

பேரிடி

பேரிடி

அதில் சம்பட் கனாக் நியூஸ் என்ற நிறுவனத்தில் கருத்து கணிப்புகளில் ஒடிஸா மாநிலத்தின் முதல்வராக 5-ஆவது முறை நவீன் பட்நாயக் தேர்வு செய்யப்படுவார் என தெரிவித்துள்ளன. எனவே இதில் பாஜகவுக்கு பேரிடி காத்திருப்பது நன்றாக தெரிகிறது.

கருத்து கணிப்பு

கருத்து கணிப்பு

அதே வேளை கடந்த முறை லோக்சபா தேர்தலில் ஒடிஸாவில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற பாஜக இந்த முறை 8 முதல் 12 இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 21-இல் 20 தொகுதிகளிலும் வெற்றியை குவித்த ஆளும் கட்சியான பிஜேடிக்கு வெறும் 6 முதல் 9 இடங்கள்தான் கிடைக்கும் என பேரிடியை கருத்து கணிப்பு முடிவுகள் தெளிவாக்கியுள்ளன.

பேரிடியாகவே தெரிகிறது

பேரிடியாகவே தெரிகிறது

மேலும் காங்கிரஸ் ஒரு இடத்தில் வெற்றி பெறும். மற்ற தொகுதிகளில் இழுபறி நிலவும் என தெரிவித்துள்ளது. புவனேஸ்வரத்தின் லோக்சபா தொகுதியை பாஜக பிடிக்கும் என தெரிகிறது. என்னதான் சட்டசபையில் பிஜேடிக்கு வெற்றி கிட்டினாலும் லோக்சபையில் கடந்த காலங்களை ஒப்பிடும்போது பேரிடியாகவே கருதப்படுகிறது.

English summary
The Sambad Kanak News Exit Poll on Sunday said Naveen Patnaik will become the CM of Odisha. But the BJP is set to win 08-12 Lok Sabha seats in Odisha, while BJP will win 6-9 seats only.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X