For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இம்ரான் கான் பதவியேற்பு விழாவில், பாக். ராணுவ தளபதியை கட்டிப்பிடித்த சித்து.. வெடித்தது சர்ச்சை

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    பாக். ராணுவ தளபதியை கட்டிப்பிடித்த சித்து

    டெல்லி: பாகிஸ்தான் பிரதமராக 'பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப்' கட்சி தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் இன்று பதவியேற்றார்.

    பாகிஸ்தானின் 22வது பிரதமராக இம்ரான் கான் இன்று பதவியேற்ற நிலையில், இதில் பங்கேற்க இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் அரசில் அமைச்சராக பதவி வகிப்பருமான நவ்ஜோத் சிங் சித்து சென்றார்.

    அரசியல்வாதியாக செல்லவில்லை என்றும், இம்ரான் கானுடனான நட்புக்காக செல்வதாகவும், சித்து தெரிவித்திருந்தார்.

    அமைதியின் தூதுவர்

    பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப் கட்சி சார்பில், சித்துவிற்கு வரவேற்பு அளித்து ட்வீட் செய்யப்ட்டிருந்தது. சித்துவே வருக, அமைதி செய்தியை இந்தியாவுக்கு கொண்டு செல்க என பாகிஸ்தான் நெட்டிசன்கள் அதில் கருத்து கூறியிருந்தனர்.

    வாகா எல்லை

    இந்தியா-பாகிஸ்தான் வாகா எல்லை வழியாக சித்து பாகிஸ்தான் சென்றிருந்தார். இவர் இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் பங்கேற்றதில் சிக்கல் எழவில்லை. ஆனால், அங்கே செய்த ஒரு காரியம்தான் இப்போது இந்திய ட்வீட்டர்வாசிகளிடையே சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

    ராணுவ தளபதியுடன் கட்டிப்பிடிப்பு

    இம்ரான் கான் பிரதமராக பதவியேற்ற விழாவில் பாகிஸ்தான், ராணுவ தளபதி, ஜெனரல் குமர் ஜாவித் பஜ்வா பங்கேற்றார். அவரை கண்டு கைகொடுத்த சித்து, கட்டி பிடித்தார். இந்த வீடியோ காட்சி வெளியான நிலையில், விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தான் ராணுவமும் அதன் உளவு அமைப்பும்தான், அரசாங்கத்தையும் மீறி இந்தியா மீது பகை வளர்த்து வருகின்றன. எனவே, சித்து மீதான விமர்சனங்கள் கடும் காட்டமாக உள்ளன. மேலும், சித்து பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஜனாதிபதி (PoK) மசூத் கான் அடுத்து அமர வைக்கப்பட்டதும் இந்திய நெட்டிசன்களை கோபப்படுத்தியுள்ளது.

    கிரிக்கெட்டில் அப்படி

    கிரிக்கெட் களத்தில், பாகிஸ்தான் வீரருக்கு எதிராக சித்து எப்படி ஆக்ரோஷம் காட்டினார் என்பதையும், இப்போது சித்து எப்படி அந்த நாட்டு ராணுவ தளபதியை கட்டி பிடித்தார் என்பதையும் ஒப்பிடுகிறது இந்த ட்வீட்.

    English summary
    In the Imran Khan was sworn-in Pakistan’s 22nd Prime Minister, function Navjot Singh Sidhu grabbed lot of eyeballs across the globe for his hug.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X