For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கப்பலுக்குள் வைத்து கடற்படை அதிகாரியை தாக்கிய மாலுமிகள்.. ஹெலிகாப்டரில் வந்து குதித்த பாதுகாப்பு படை

இந்திய ராணுவம் கட்டுக்கோப்புக்காக புகழ் பெற்றது. இப்படிப்பட்ட செயல்களை பொறுக்க முடியாது என்று கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

By Veera Kumar
Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: நடுக்கடலில் பயணித்த கப்பலில் வைத்து, உயர் அதிகாரியை கை நீட்டி அடித்த மாலுமிகளை, பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டர் வரவழைத்து கொண்டு செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் பாரதீப் கடல் பகுதியில் ஐஎன்எஸ் சந்யாக் கப்பல் நேற்று பயணித்து, சர்வே செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, கப்பலில் ஜூனியர் அளவிலான மாலுமிகளில் ஒருவர் உயர் அதிகாரியின் உத்தரவை மீற மறுத்துள்ளார். அவரோடு சேர்ந்து மேலும் மூன்று ஜூனியர் மாலுமிகள், அதிகாரியை தாக்கியுள்ளனர்.

Navy Sailors Assault Officer On Board, Face Probe For Insubordination

இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரி பாதுகாப்பு படையினரை வரவழைத்தார். ஹெலிகாப்டரில் வந்த பாதுகாப்பு படையினர், கப்பலில் இறங்கி, மாலுமிகள் நால்வரையும் ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் சென்றனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கப்பல் வழக்கம்போல பயணித்தது. ரோந்து படகை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அதிகாரி கூறியதை ஏற்க மறுத்தபோது இந்த மோதல் ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய ராணுவம் கட்டுக்கோப்புக்காக புகழ் பெற்றது. இப்படிப்பட்ட செயல்களை பொறுக்க முடியாது என்று கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Four sailors of the Indian Navy have been removed from the survey ship INS Sandhayak after some of them assaulted an officer on board, in an incident off Paradip along the Odisha coast.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X