For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இயக்கத்தில் சேர மறுத்த பழங்குடி இன வாலிபர் வெட்டிக் கொலை... சத்தீஸ்கரில் நக்சல்கள் அட்டகாசம்

Google Oneindia Tamil News

பீஜாபூர்: நக்சல் இயக்கத்தில் சேர மறுத்ததற்காக சத்தீஸ்கரில் பழங்குடி இன வாலிபர் ஒருவர் படுகொலைச் செய்யப் பட்டுள்ளார்.

சத்தீச்கரில் உள்ள பீஜாபூர் பகுதியில் உள்ள பாய்குடாவைச் சேர்ந்தவர் தேவேந்திரா மோடம் என்ற இளைஞர். பழங்குடி இனத்தைச் சேர்ந்த தேவேந்திரா அல்லது அவரது சகோதரரை தங்கள் இயக்கத்தில் சேரச் சொல்லி நக்சல்கள் வற்புறுத்தி வந்துள்ளனர். ஆனால், அதற்கு தேவேந்திரா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சுமார் 25 போராட்டக்காரர்கள் நேற்றிரவு தேவேந்திராவின் வீட்டைச் சுற்றி வளைத்தனர். வீட்டிற்குள் இருந்த தேவேந்திராவை பயங்கர ஆயுதங்களால் தாக்கி தங்களது இயக்கத்தில் சேரச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.

ஆனால், தொடர்ந்து வலியைப் பொறுத்துக் கொண்டு நக்சல்கள் இயக்கத்தில் சேர முடியாது என தெவேந்திரா மறுத்துள்ளார். இதனால் மேலும் ஆவேசமடைந்த போராட்டக்காரர்கள் கோடாரியால் தேவேந்திராவை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் தேவேந்திரா பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையிடர் தேவேந்திராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து பாய்குடா கிராமத்தில் நக்சல்கள் யாராவது ஒளிந்திருக்கிறார்களா என்ற தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

நக்சல்கள் இயக்கத்தில் சேர மறுத்த இளைஞர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

English summary
A tribal youth was killed allegedly by Naxals when he refused to join their movement in Chhattisgarh's Bijapur district, police said today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X