For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சரத்பவார் மகளுக்கு எதிராக போட்டியிட தயாரா?: உத்தவ் தாக்கரேவிற்கு தேசியவாத காங். சவால்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

NCP dares Uddhav Thackeray to contest LS polls against Supriya Sule
மும்பை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்து சிவசேனாத்தலைவர் உத்தவ் தாக்கரே போட்டியிட தயாரா என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சவால் விடுத்துள்ளனர்

திங்களன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்,பாஸ்கர் ஜாதேவ், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாரின் சிர்புர் தொகுதியை உத்தவ் தாக்கரே குறிவைத்து உள்ளார்.

சிர்புர் தொகுதியில் சரத்பவார் போட்டியிட்டால் அவரை டெபாசிட் இழக்கச் செய்வேன் என்று உத்தவ் தாக்கரே சவால் விட்டுள்ளார். ஆனால் பவார், ஏற்கனவே தான் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

அதற்குப் பதிலாக உத்தவ் பாராமாதி தொகுதியில் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்து போட்டியிடத்தயாரா? மக்களைத் தேர்தலில் போட்டிய அச்சமாக இருந்தால், சட்டமன்ற தேர்தலிலாவது சுப்ரியா சுலேவை எதிர்த்து போட்டியிட்டு வென்று காட்டட்டும் என்றும் அவர் சவால் விடுத்தார்.

உத்தவ் சிறந்த தலைவர் இல்லை என்பது அவருக்கே தெரியும். சிவசேனா கட்சி சாதாரண மக்களின் நிலையை அறிந்து கொண்டதில்லை. அதனால்தான் சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் கூட தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைய நினைக்கின்றனர் என்றார் அவர்.

English summary
NCP on Monday dare Shiv Sena president Uddhav Thackeray to contest the Lok Sabha election against Supriya Sule from the Baramati parliamentary seat.Addressing a press conference, NCP's state chief Bhaskar Jadhav launched a blistering attack on Uddhav for targeting Union Agriculture Minister Sharad Pawar at a rally at Shirur in Pune district on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X