For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்டிடிவி விற்பனை செய்யப்பட்டதா? தீயாய் பரவும் தகவல்கள்.. உண்மை என்ன?

என்டிடிவி செய்தி நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு விற்கப்பட்டதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளன.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    NDTV விற்பனை செய்யப்பட்டதா?-வீடியோ

    டெல்லி : பிரபல செய்தி நிறுவனமான என்டிடிவியின் பெரும்பாலான பங்குகள் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு விற்கப்பட்டதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    செய்தி ஊடகங்களில் பழமை வாய்ந்த நியூ டெல்லி டெலிவிஷன் லிமிடட்(என்டிடிவி) பிரன்னாய் ராய் மற்றும் ராதிகா ராயால் 1988ல் தொடங்கப்பட்டது. இந்த தொலைக்காட்சியின் பங்குகள் கைமாறியதாக செய்திகள் பரவின. சமூக வலைத்தளங்களில் டிவி பெயர் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.

    செய்தி சேனலின் நிறுவனர்களின் பங்குகள் 20 சதவீதமாக குறைந்தள்ளதாகவும், ஸ்பைஸ் ஜெட்டின் அஜய் சிங்கிடம் 40 சதவீத பங்குகள் கைமாற உள்ளதாக செய்திகள் பரவின.

     உண்மையில்லை

    உண்மையில்லை

    ஆனால் இந்த தகவலில் துளியளவும் உண்மையில்லை என்று எம்டிடிவியின் மூத்த அதிகாரி கூறியுள்ளார். இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்றே அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிகிறது.

     சிபிஐ சோதனை

    சிபிஐ சோதனை

    கடந்த சில மாதங்களாகவே என்டிடிவிக்கு எதிரான நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன. ஜூன் 5ல் பிரன்னாய் ராய் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. இது ஊடக சுதந்திரம் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று என்டிடிவி அப்போது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது.

     தடை செய்த மத்திய அரசு

    தடை செய்த மத்திய அரசு

    மேலும் கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற பதான்கோட் தீவிரவாத தாக்குதல் குறித்து செய்தி ஒளிபரப்பியதற்காக என்டிடிவியின் ஒரு நாள் ஒளிபரப்பிற்கு அப்போது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த வெங்கய்ய நாயுடு தடை விதித்து உத்தரவிட்டார்.

     என்டிடிவிக்கு நெருக்கடி

    என்டிடிவிக்கு நெருக்கடி

    பதான்கோட் விமான தளம் குறித்த பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டு தேசப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக அப்போது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் பத்திரிக்கையாளர்களின் கடுமையான எதிர்ப்புகள் மற்றம் உச்சநீதிமன்ற உத்தரவால் அந்த நடவடிக்கை நிறுத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    NDTV denies the report of major shares have been given to Spice Jet, and a formal statement on this issue is expected to be released today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X