For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜக அணி- 279; காங். அணி 103; இதர கட்சிகள் 161 இடங்களைக் கைப்பற்றும்: என்.டி.டி.வி. எக்ஸிட் போல்

By Mathi
|

டெல்லி: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 279 இடங்களைக் கைப்பற்றும் என்கிறது எக்ஸிட் போல்.

லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. அதற்கு முன்னதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளான எக்ஸிட் போல் முடிவுகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

இதுவரை அனைத்து ஊடகங்களுமே மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளன. என்.டி.டிவி. தொலைக்காட்சியும் நேற்று எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டது.

பாஜக அணி 279

பாஜக அணி 279

இதில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 543 இடங்களில் மொத்தம் 279 இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2009ஆம் ஆண்டு தேர்தலைவிட 138 இடங்கள் கூடுதலாகும்.

காங்கிரஸ் அணி 103

காங்கிரஸ் அணி 103

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 103 இடங்களைக் கைப்பற்றும். இது கடந்த தேர்தலைவிட 131 இடங்கள் குறைவு.

இதர கட்சிகள்

இதர கட்சிகள்

இடதுசாரிகள் உள்ளிட்ட இதர கட்சிகள் அனைத்தும் இணைந்து 161 இடங்களைக் கைப்பற்றும்.

கட்சிகளும் இடங்களும்

கட்சிகளும் இடங்களும்

காங்கிரஸ்- 79

அதிமுக - 32

திரிணாமுல் காங்கிரஸ் - 30

இடதுசாரிகள் - 19

சிவசேனா - 15

பிஜூ ஜனதா தளம் - 13

தெலுங்கு தேசம் - 12

சமாஜ்வாடி கட்சி - 12

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - 12

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி - 11

ராஷ்டிரிய ஜனதா தளம் - 10

உ.பி.யில் பாஜக - 56

உ.பி.யில் பாஜக - 56

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக அணி 56, சமாஜ்வாடி 12, பகுஜன் சமாஜ் - 8, காங்கிரஸ் 4 இடங்களைக் கைப்பற்றும்.

ஜார்க்கண்ட் பாஜக 12

ஜார்க்கண்ட் பாஜக 12

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 14 தொகுதிகளில் 12 ஐ பாஜக கைப்பற்றும் காங்கிரஸ்- 1, இதர கட்சிகள் 1 இடத்தைக் கைப்பற்றும்.

பீகார்

பீகார்

இம்மாநிலத்தில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளில் பாஜக 22, ராஷ்டிரிய ஜனதா தளம் 14, ஐக்கிய ஜனதா தளம் 4 இடங்களைக் கைப்பற்றும்.

ஹரியானா

ஹரியானா

ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளில் பாஜக 7, காங்கிரஸ் 2, இந்திய தேசிய லோக் தளம் 1 இடத்தைக் கைப்பற்றும்.

பஞ்சாப்பில் காங். 6

பஞ்சாப்பில் காங். 6

பஞ்சாப் மாநிலத்தில் 13 தொகுதிகளில் காங்கிரஸ் 6, பாஜக 5, ஆம் ஆத்மி 2 இடங்களைக் கைப்பற்றும்.

டெல்லியில் பாஜக

டெல்லியில் பாஜக

டெல்லியில் மொத்தம் உள்ள 7 லோக்சபா தொகுதிகளில் பாஜக 5 இடங்களையும் ஆம் ஆத்மி 2 இடங்களையும் கைப்பற்றும்.

குஜராத்தில் பாஜக 22

குஜராத்தில் பாஜக 22

குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளில் 22 ல் பாஜக, காங்கிரஸ் 4 ல் வெல்லும்.

English summary
NDTV's Exit Poll shows that the BJP-led National Democratic Alliance or NDA is set to win 279 seats, seven more than the majority mark at 272, with Uttar Pradesh playing a starring role in Narendra Modi's move to Delhi as the head of an NDA government. The Congress will only get seats in double digits.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X