For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீட் தேர்வு 2018: ஆதார் கட்டாயமில்லை : சிபிஎஸ்இ-க்கு எதிராக உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: நீட் தேர்வு எழுதுவதற்கு ஆதாரை கட்டாயம் இல்லை என்று அதற்கு பதிலாக வேறு அடையாள அட்டைகளை மாணவர்கள் சமர்ப்பிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண்ணை சிபிஎஸ்இ கட்டாயமாக்கியது. இதை எதிர்த்து குஜராத்தைச் சேர்ந்த அபித் அலி படேல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

NEET 2018: Aadhaar not mandatory says Supreme Court

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் அட்டார்னி ஜெனரல் வேணுகோபால் கூறுகையில் நீட் தேர்வு 2018-க்கு ஆதார் கட்டாயமில்லை. இந்த விதியை அமல்படுத்துமாறு நாங்கள் சிபிஎஸ்இக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

ஜம்மு- காஷ்மீர், மேகாலயா மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் உள்ளது போல் மற்ற அடையாள அட்டைகளை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்தார். இதையடுத்து நீட் உள்ளிட்ட அகில இந்திய தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயமில்லை என்ற இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாள்

English summary
The Supreme Court has said that Aadhaar is not mandatory for NEET 2018. The court said that any other form of identification proof can be used instead of Aadhaar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X