For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஃபனி புயலால் சின்னாபின்னமான ஒடிஸா மாநிலம்.. வரும் 20-இல் நீட் தேர்வு என அறிவிப்பு

Google Oneindia Tamil News

புவனேஸ்வரம்: ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஸா மாநிலத்தில் வரும் 20-ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் எனும் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் மாணவர் பெறும் மதிப்பெண்ணை வைத்தே மருத்துவ சேர்க்கை நடத்தப்படுகிறது.

Neet exam will be conducted for Odisha on May 20

இந்த ஆண்டுக்கான அந்த தேர்வு மே 5-ஆம் தேதி நடத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. இதனிடையே ஒடிஸாவில் ஃபனி புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த மாநிலத்துக்கு நீட் தேர்வை ஒத்திவைக்குமாறு கோரப்பட்டது.

நீட் தேர்வு.. புகைப்படம் இல்லாததால் மாணவர் வெளியேற்றம்.. ரூ. 40 கொடுத்து உதவிய போலீஸ் காவலர்நீட் தேர்வு.. புகைப்படம் இல்லாததால் மாணவர் வெளியேற்றம்.. ரூ. 40 கொடுத்து உதவிய போலீஸ் காவலர்

இதையடுத்து ஒடிஸா மாநிலத்தில் நீட் தேர்வை மறு தேதி குறிப்பிடாமல் தேசிய தேர்வுகள் முகமை ஒத்தி வைத்தது. இந்த நிலையில் நேற்று ஒடிஸா தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.

இந்த நிலையில் ஒடிஸா மாநிலத்துக்கு வரும் 20-ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது. வரும் 20-ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணிக்கு தேர்வு நிறைவடையும் என தெரிவித்துள்ளது.

English summary
Neet exam will be conducted for Odisha on May 20. It was postponed from May 5 because of Fani cyclone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X