For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீட் தேர்வு எழுத பிரா அணிய கூடாதா? கொடுமையை எதிர்த்து களமிறங்கிய கேரள மனித உரிமை கமிஷன்

By Veera Kumar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் பிராவை கழற்ற கூறி ஆசிரியைகள் அராஜகம் செய்த சம்பவம் குறித்து மனித உரிமை கமிஷன் விசாரணையை ஆரம்பித்துள்து.

எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் பொது நுழைவு தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஒரே வகையான தேர்வினை மாணவர்கள் எழுத வேண்டும். அதில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியும் என்ற நிலையை மத்திய மனித வளத்துறை நடைமுறைப்படுத்தியுள்ளது.

கேரளாவின் கண்ணூர் நகரிலுள்ள டிஐஎஸ்கே என்ற ஆங்கில மீடியம் பள்ளியில் நடைபெற்ற தேர்வின்போது, நினைத்து பார்க்க முடியாத அராஜகம் அரங்கேறியது. தேர்வு எழுத வந்த மாணவியை பிராவை கழற்றச் செய்து உத்தரவிட்டுள்ளனர் தேர்வை மேற்பார்வையிட்ட ஆசிரியர்கள்.

பிராவை கழற்ற உத்தரவு

பிராவை கழற்ற உத்தரவு

பிரா ஹுக், மெட்டல் பொருளால் ஆனது என்பதால், மெட்டல் பொருட்களை தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்லக்கூடாது என்று காரணம் கூறி, அதே இடத்தில் பிராவை கழற்றுமாறு ஆசிரியர்கள் உத்தரவிட்டனர். இந்த சம்பவம் ஊடகங்கள் வெளியாகிய நிலையில், அராஜகம் செய்த ஆசிரியைகள், ஷீஜா, சஃபீனா, பிந்து மமற்றும் சஹைனா ஆகியோர் ஒரு மாதகாலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணை

விசாரணை

ஊடகங்களில் வெளியான செய்தியை பார்த்து, கேரள மாநில, மனித உரிமை கமிஷன், தானாக முன்வந்து, suo motu வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளது. மண்டல சிபிஎஸ்இ இயக்குநர் இன்னும் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று, மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

போலீஸ் விசாரிக்க உத்தரவு

போலீஸ் விசாரிக்க உத்தரவு

மேலும், சம்பவம் குறித்து கன்னூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

குழந்தைகள் நல கமிஷன்

குழந்தைகள் நல கமிஷன்

இதனிடையே, கேரள குழந்தைகள் நல கமிஷனும், இதுகுறித்து விசாரணையை தொடங்கியுள்ளது. நீட் தேர்வின்போது நடந்த சம்பவம் மற்றும் விதிமுறைகள் குறித்து 10 நாட்களுக்குள் தங்களுக்கு பதிலளிக்க வேணண்டும் என்று, குழந்தைகள் நல கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அடுத்தடுத்த நெருக்கடிகளால், திணறுிறது சிபிஎஸ்இ நிர்வாகம்.

English summary
Kerala Child Rights Commission has asked CBSE to file a detailed report about the incident and rules that led to it within 10 days. The Human Rights commission in Kerala took suo moto cognizance of the incident and sought a 'high-level' probe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X