For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் விவகாரம்... 20இல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்

நீட் தேர்வில் தமிழில் தேர்வு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் 20-ஆம் தேதி விசாரணை நடத்துகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    நீட் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு- வீடியோ

    டெல்லி: நீட் தேர்வில் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் 20ஆம் தேதி விசாரணை நடத்துகிறது.

    நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில் நிறைய குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கட்சி ராஜ்யசபா உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், ஹைகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார்.

    Neet grace mark case: SC to hear the appeal case on July 20

    49 வினா-விடைகள் தவறாக இருந்ததால் கேள்விக்கு 4 மதிப்பெண் என்று மொத்தமாக தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க வேண்டும் என்று மதுரை கிளை கடந்த 15-ஆம் தேதி தீர்ப்பளித்தது.

    இதை எதிர்த்து சிபிஎஸ்இ ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் 20ஆம் தேதி விசாரணை நடத்துகிறது. முன்னதாக சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தால் தங்கள் கருத்தையும் கேட்க வேண்டும் என்று டி.கே ரங்கராஜன் மனுவில் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    CBSE appeal in SC against Neet grace mark for Tamil students. The hearing will be on July 20th.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X