For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில்வே தண்டவாளம் ரிப்பேர் என்கிற தகவலை 'உத்கல் எக்ஸ்பிரஸ்' டிரைவருக்கு தெரிவிக்காத அதிகாரிகள்

By Siva
Google Oneindia Tamil News

லக்னோ: உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதற்கு அலட்சியப் போக்கு தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.

ஒடிஷா மாநிலம் புரியில் இருந்து உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாருக்கு சனிக்கிழமை கிளம்பிய உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது.

Negligence: Utkal Express train driver not informed about track repair

மாலை 5.46 மணி அளவில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர்நகரில் சென்று கொண்டிருந்தபோது ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 23 பேர் பலியாகினர், 72 பேர் காயம் அடைந்தனர்.

உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்த வழியில் தண்டவாளத்தை சரி செய்யும் பணி நடந்துள்ளது. இதை ரயில் டிரைவருக்கு யாரும் தெரிவிக்காமல் அலட்சியமாக இருந்ததே விபத்திற்கு காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது,

தண்டவாளத்தில் 15 மீட்டர் நீளம் அகற்றப்பட்டு அதை மாற்றும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்ததை பார்த்த பணியாளர்கள் தங்களின் உயிரை காத்துக் கொள்ள வேறு வழியில்லாமல் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

புதிதாக மாற்ற வைத்திருந்த 15 மீட்டர் தண்டவாளம் தடம் புரண்ட ரயிலின் ஒரு பெட்டிக்கு அடியில் இருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது என்றனர்.

English summary
Negligence led to the horrific train accident at Muzzafarnagar in Uttar Pradesh in which 23 persons died. The track was under repair, but the driver of the train was not informed about the same.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X