For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமருடன் மோதல்- இந்தியாவுக்கான நேபாள தூதர் திடீர் வாபஸ்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி : நேபாள பிரதமர் ஷர்மா ஒலியுடன் மோதல் போக்கை கடைபிடித்ததால் இந்தியாவுக்கான தூதர் உபாத்யாவை அந்நாடு வாபஸ் பெற்றுள்ளது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் அழைப்பை ஏற்று நேபாள அதிபர் பித்யாதேவி பண்டாரி வருகிற 9-ந்தேதி முதல் 6 நாள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக இருந்தது. ஆனால், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.

Nepal decides to recall its Envoy from India

இதுகுறித்து நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி, இந்தியாவுக்கான தூதர் உபாத்யாயாவை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பிரதமருடன் ஏற்பட்ட மோதல், அரசுடன் ஒத்துழையாமை மற்றும் அரசு எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் உபாத்யாவை திரும்ப அழைப்பதாக நேபாள வெளியுறவுதுறை தெரிவித்துள்ளது.

English summary
The Nepal government decided to recall its ambassador to India Deep Kumar Upadhyay.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X