For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இதுவரை 5000 கிலோ குப்பைகள் அகற்றம்.. நேபாள ராணுவம் கடும் உழைப்பு

Google Oneindia Tamil News

இமயமலையிலிருந்து 5,000 கிலோ குப்பை கழிவுகளை நேபாள ராணுவம் அகற்றியுள்ளது. இமயமலைப்பகுதியில் தேங்கியிருக்கும் குப்பை கழிவுகளை அகற்றும் முயற்சியில், கடந்த மாதம் 14-ம் தேதி முதல் நேபாள ராணுவத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

உலகின் உயரமான சிகரமாக இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் கருதப்படுகிறது. கடல் மட்டத்துக்கு மேல் 29,028 அடி உயரம் கொண்டது இந்த சிகரம். மலையேற்ற வீரர்களின் வாழ்நாள் லட்சியமாக எவரெஸ்ட் இருக்கிறது. ஒரு முறையாவது எவரெஸ்ட்டில் ஏறிவிட வேண்டுமென்பது மலையேற்ற சாகசம் புரிபவர்களின் கனவாகும்.

Nepal Governments clean Everest scheme ..Removable 5,000 kg of waste disposal

நேபாளத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏற ஆண்டு தோறும் ஏராளமான மலையேற்ற வீரர்களும், அவர்களுக்கு உதவியாக உள்ளூர் கைடுகளும் செல்கின்றனர்

சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அதிரடியாக உயர்த்தி டிரம்ப்: மீண்டும் வர்த்தக போர் அபாயம்! சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அதிரடியாக உயர்த்தி டிரம்ப்: மீண்டும் வர்த்தக போர் அபாயம்!

அப்படி அவர்கள் இந்த சிகரத்திற்கு செல்லும் போது ஆக்ஜிசன் குடுவை, மதுபாட்டில்கள், உணவுப் பொட்டலங்கள், மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணங்கள் என பலவற்றையும் எடுத்துச் செல்கின்றனர்

Nepal Governments clean Everest scheme ..Removable 5,000 kg of waste disposal

கொண்டு போகும் பொருட்களையெல்லாம் பயன்படுத்திவிட்டு சிகரங்களின் வழிகளில் அவற்றை ஆங்காங்கே வீசிவிட்டு வந்து விடுகின்றனர். இதனால் எவரெஸ்ட் சிகரத்தில் குப்பைகள் சேர்ந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது

Nepal Governments clean Everest scheme ..Removable 5,000 kg of waste disposal

கூடாரங்கள் அமைக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள், உணவு பொட்டலங்களின் கழிவுகள், பழைய உடைகள் என 25 டன்களுக்கும் மேலாக குப்பைகள் அங்கு குவிந்துள்ளன

இதனையடுத்து நேபாள ராணுவத்தால் எவரெஸ்ட்டை சுத்தப்படுத்தும் பணி என்ற திட்டம் தொடங்கப்பட்டது. 45 நாட்களில் 10 ஆயிரம் கிலோ குப்பைகளை அகற்ற நேபாள அரசு இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், தற்போது 5 ஆயிரம் கிலோ குப்பைகளை அகற்றியுள்ளதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

English summary
Nepalese army has removed 5,000 kg of garbage from the Himalayas. The Nepalese army has been engaged since the 14th of last month in an attempt to remove waste inHimalayas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X