For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி அரசின் ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் இன்னமும் விழிபிதுங்கும் நேபாளம், பூடான்!

மோடி அரசின் ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு நேபாளம், பூடானை கடுமையாக பாதித்திருக்கிறது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் இன்றும் தவிக்கும் நேபாளம்

    டெல்லி: மோடி அரசின் ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள முடியாமல் அண்டை நாடுகளான நேபாளம், பூடான் விழிபிதுங்கி நிற்கின்றன. இந்த விவகாரம் குறித்து பேசுவதற்காக நேபாள பிரதமர் சர்மா ஒலி இந்தியா வருகை தந்துள்ளார்.

    2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பிரதமர் மோடி ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என திடீரென அறிவித்தார். இது தேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    Nepal PM Sharma Oli arrives in India

    மக்களிடையே பணப்புழக்கம் இல்லாமல் வங்கிகளிலும் ஏடிஎம் மையங்களிலும் கால்கடுக்க நின்று செத்து மடிந்த சோகங்கள் அரங்கேறின. கறுப்பு பணத்தை ஒழிக்கத்தான் இந்த நடவடிக்கை என முழங்கினார் பிரதமர் மோடி.

    ஆனால் இந்த நடவடிக்கையால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? எவ்வளவு கருப்புப் பணம் வந்தது? ஆகக் குறைந்தபட்சம் எவ்வளவு பணம் திரும்ப வந்தது? என்கிற எந்த ஒரு விவரமும் தெரிவிக்கப்படவில்லை. ஒன்றரை ஆண்டுகளாக ரூபாய் நோட்டுகளை எண்ணுகிறோம் என ரிசர்வ் வங்கி கூறுகிறது.

    இந்த ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பானது இந்திய பணம் புழங்கும் நேபாளம், பூடான் நாடுகளிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நாடுகளில் இந்திய பணம் ரூ500, ரூ1,000 நோட்டுகளை வைத்திருந்தவர்கள் அரசிடம் ஒப்படைத்தனர். ஆனால் இந்த பழைய ரூபாய் நோட்டுகளுக்கு மாற்று குறித்து மோடி அரசு இதுவரை முறைப்படியான எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.

    நேபாளத்தில் மட்டும் ரூ950 கோடி இந்திய பணத்தை அந்நாட்டு அரசு கையில் வைத்திருக்கிறது. இதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் தருமாறு தொடர்ந்து அந்த நாடு கேட்டுப் பார்த்தது.

    ஆனால் டெல்லி பாஜக அரசு இதைப்பற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. இதனால் வேறுவழியின்றி நேபாள பிரதமர் சர்மா ஒலி இன்று டெல்லிக்கு வருகை தந்துள்ளார். அவரை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வரவேற்றார்.

    English summary
    Prime Minister of Nepal KP Sharma Oli arrived in India on a three day state visit.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X