For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இங்கிலாந்து ராணுவ விசாரணையில்தான் கொல்லப்பட்டார் நேதாஜி- திடுக் தகவல்

நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்கிறது புதிய புத்தகம்; இங்கிலாந்து ராணுவ விசாரணையில்தான் அவர் கொல்லப்பட்டார் என்கிறது அப்புத்தகம்.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை; இங்கிலாந்தின் ராணுவ விசாரணையிலே அவர் சித்ரவதை செய்து கொல்லப்பட்டார் என புதிய புத்தகத்தில் திடுக்கிடும் தகவல் இடம்பெற்றுள்ளது.

1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ந் தேதி விமான விபத்தில் நேதாஜி இறந்தார் என கூறப்படுகிறது. ஆனாலும் நேதாஜியின் மரணம் தொடர்பாக மர்மம் நீடித்து வருகிறது.

Netaji didn't die in plane crash, claims new book

1945-ம் ஆண்டுக்குப் பின்னரும் நேதாஜி உயிருடன் இருந்தார்; மேற்கு வங்கத்துக்கு வந்து சென்றார் என்பதற்கான ஆவணங்களை மேற்கு வங்க மாநில அரசு வெளியிட்டிருந்தது. மத்திய அரசும் இதேபோல் நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பக்ஷி "Bose: The Indian Samurai - Netaji and the INA Military Assessment" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:

இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மன் குண்டுவீச்சில் தப்பிய நேதாஜி சைபீரியாவில் முகாம் அமைத்தர். அங்கு 3 வானொலி நிலையங்களையும் நேதாஜி அமைச்சர்.

இதை இங்கிலாந்து ராணுவம் அறிந்து கொண்டது. ரஷ்யாவின் உதவியுடன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸிடம் இங்கிலாந்து ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போதுதான் நேதாஜி கொல்லப்பட்டார்.

இவ்வாறு அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
According to new book, Netaji did not die in a plane crash, but during interrogation and torture by the British at a prison in the former Soviet Union.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X