For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரிமினல் அரசியல்வாதிகள் 13 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை: மத்திய அரசு அதிரடி முடிவு!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: கிரிமினல் அரசியல்வாதிகள் 13 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மோடி அரசு முடிவு செய்துள்ளது.

கிரிமினல் அரசியல்வாதிகளை அமைச்சரவையில் சேர்க்கவே கூடாது என்று பிரதமர் மற்றும் மாநில முதல்வர்களுக்கு உச்சநீதிமன்றம் நேற்று மறைமுகமாக அறிவுறுத்தல் விடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து கிரிமினல் அரசியல்வாதிகளை அரசியல் அரங்கில் இருந்து அப்புறப்படுத்த கடும் நடவடிக்கைகள் மேற்கொள்வது என மோடி அரசு முடிவு செய்திருக்கிறது.

Netas charged with heinous crimes may be barred from polls for 13 years

இதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் எப்படியெல்லா சட்ட திருத்தம் கொண்டுவரலாம் என்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு உத்தேசித்து வரும் திருத்தங்கள்:

  • எந்த ஒரு குற்றத்துக்காகவும் 7 ஆண்டுக்கும் மேல் சிறைத் தண்டனை பெறுகிற நபர் தேர்தலில் போட்டியிட முடியாது.
  • 7 ஆண்டு சிறைத் தண்டனை முடிந்த பின்னரும் மேலும் 6 ஆண்டுகளுக்கும் அந்த நபர் தேர்தலில் போட்டியிட இயலாது.
  • ஒருநபர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தாலும் அவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்.
  • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 180 நாட்களுக்குள் வேட்பாளர்கள் மீதான குற்றப்பத்திரிக்கைக்கு தீர்வு காணப்படாவிட்டால் அவர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
  • தேர்தல் ஆணையத்திடம் பொய்யான சொத்து மதிப்பை தாக்கல் செய்யபவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த வேட்பாளரும் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
  • பொய்யான சொத்து விவரங்களை அளிப்பவர்களுக்கு 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

English summary
The Narendra Modi government is ready with some tough proposals to decriminalize politics by amending the Representation of People Act to debar those against whom charges are framed in a heinous crime from contesting elections for a minimum of 13 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X