For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிடிஎச், கேபிள்களுக்கு மாற்று.. இந்தியாவில் கால் பதிக்கிறது இணையதள டிவி சேவை நிறுவனம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: கேபிள் கனெக்ஷன், டிடிஎச் சேவையின்றியே டிவி சேனல் நிகழ்ச்சிகளை இணையதளம் வழியாக கொண்டு சேர்க்கும் உலகின் முன்னணி நிறுவனமான 'நெட்ப்ளிக்ஸ்' அதி விரைவில் இந்தியாவில் தனது வர்த்தகத்தை ஆரம்பிக்க உள்ளது. இதனால் டிடிஎச் சேவை நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க நிறுவனம்

அமெரிக்க நிறுவனம்

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்துக்கு, ஐரோப்பா, தென் ஆப்பிரிக்க நாடுகளில் சுமார் 6 கோடிக்கும் மேல் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிறுவனம், இந்தியாவில், 2016ம் ஆண்டுக்கு முன்பாக காலடி எடுத்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்மார்ட் டிவிகள்

ஸ்மார்ட் டிவிகள்

இணையதள வசதியை பயன்படுத்தும் ஸ்மார்ட் டிவிக்கள் இப்போதெல்லாம் நடுத்தர வர்க்கத்து வீடுகளையும் அலங்கரிக்க தொடங்கியுள்ளன. இந்த மார்க்கெட்டை குறிவைத்து நெட்ப்ளிக்ஸ் களமிறங்க உள்ளது. இணைய வசதியின் மூலமே டிவி சேனல்களை பார்க்க நெட்ப்ளிக்ஸ் வசதிசெய்து தரும். அதே நேரம், தேவைப்படும் திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகளையும் கோரிக்கை அடிப்படையில் அளிக்க உள்ளது.

பழைய நிகழ்ச்சிகள்

பழைய நிகழ்ச்சிகள்

மால்குடி டேஸ் போன்ற பழமையான வரவேற்பு மிக்க நிகழ்ச்சிகளை தனது 'டேட்டா பேஸ்'லிருந்து நெட்ப்ளிக்ஸ் வழங்கும். இணைய வசதி கொண்ட கம்ப்யூட்டர், லேப்டாப்புகளிலும் இதன்மூலம் டிவி சேனல் நிகழ்ச்சிகளை லைவ்-ஆக பார்க்க முடியும். இது டிடிஎச் சேவை நிறுவனங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

டிடிஎச் நிறுவனங்கள் அச்சம்

டிடிஎச் நிறுவனங்கள் அச்சம்

இதையடுத்து டிடிஎச் நிறுவனங்கள் புதிய வகை தொழில்நுட்ப உதவிகளை கையாள தொடங்கியுள்ளன. டாடா ஸ்கை நிறுவன செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "டிவி ஷேக்கள், திரைப்படங்களின் வீடியோக்களை அளிக்குமாறு பல நிறுவனங்களை நாங்கள் கேட்டு வருகிறோம். இதை ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ் இயங்குதளம் வழியாக செல்போன்களுக்கு கொண்டு சேர்க்க முயற்சி செய்கிறோம்" என்றார்.

4ஜிக்கு பிறகு டாப்

4ஜிக்கு பிறகு டாப்

"தற்போதைய இணையதள செலவீனங்கள், நெட்ப்ளிக்ஸ் மற்றும் ஹெச்பிஓ போன்ற இணையதள சேவை நிறுவனங்களை முழு வீச்சில் செயல்படுவதை தடுத்துவிடும்" என்கிறார், டிஷ் டிவியின் தலைமை செயல் அதிகாரி சாலில் கபூர். 4ஜி சேவைகள் விரைவில் நாடு முழுவதும் கிடைக்க உள்ள நிலையில், நெட்ப்ளிக்ஸ் இணையதள சேவையில் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
The pioneer of internet TV, Netflix, has firmed up plans to enter India by 2016, according to sources familiar with the matter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X