For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆங்கில டிவி சேனலில் இந்தியில் பேசுவீங்களோ? வங்க மொழியில் பேசி தெறிக்கவிட்ட கார்கா சட்டர்ஜி!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: ஆங்கில டிவி சேனலில் இந்தியில் விவாதித்துக் கொண்டிருந்தவர்களை வங்க மொழியில் பேசி அலறவிட்டார் மேற்கு வங்கத்தின் பேராசிரியர் கார்கா சட்டர்ஜி. அவரை இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

மத்திய பாஜக அரசின் இந்தி திணிப்பு விவகாரமானது, இந்தி பேசாத மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளது. சி.என்.என். நியூஸ் 18 ஆங்கில டிவி சேனலில் விவாதம் ஒன்றில் பூதாகரமாக வெடித்து சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக மாறி உள்ளது.

Netizens praises Bengali Prof Garga chatterjee

அதில், மேற்கு வங்க மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான மோதல் குறித்து விவாதம் நடந்தது. இவ்விவாதத்தின் போது நெறியாளரும் கருத்து தெரிவிக்க வந்தவரும் இந்தி மொழியில் உரையாடிக் கொண்டிருந்தனர்.

இதனால் எரிச்சலடைந்த மேற்கு வங்க பேராசிரியர் கார்கா சட்டர்ஜி, வங்க மொழியில் பேச தொடங்கினர். உடனே அந்த டிவி சேனலின் நெறியாளர், கார்கா சட்டர்ஜி பேசியதை தடுக்க முயற்சித்தார்.

ஆனால் இந்திக்கு எதிராக வங்க மொழியில் கார்கா சட்டர்ஜி தொடர்ந்து பேசினார். அத்துடன் இந்த விவகாரத்தை தமது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டார். இப்போது கார்கா சட்டர்ஜிதான் இந்தி பேசாத மாநிலங்களின் ஹீரோவாகிவிட்டார்.

ராஜன் செல்லப்பாவை போல பல அமைச்சர்கள் உள்ளுக்குள் குமுறுகிறார்கள்.. திவாகரன் தடாலடி ராஜன் செல்லப்பாவை போல பல அமைச்சர்கள் உள்ளுக்குள் குமுறுகிறார்கள்.. திவாகரன் தடாலடி

அத்துடன் இந்தியை ஆதரிக்கும் நெட்டிசன்களுக்கும் சூடாக பதில் கொடுத்து வருகிறார் கார்கா சட்டர்ஜி. அதில், நான் பேசுவது வங்க மொழி மக்களுக்காகத்தானே தவிர 'குட்காவாலாக்களுக்கு' அல்ல என குட்டும் வைத்திருக்கிறார்.

English summary
Netizens praises Bengali Prof Garga chatterjee who fought against Hindi Domination in English TV Channel Debate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X