For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோஹ்லியின் ஃபிட்னஸ் சேலஞ்ச்சை ஏற்ற மோடி-கேள்விக் கணைகளால் துளைக்கும் நெட்டிசன்கள் #FitnessChallenge

பிட்னஸ் சேலஞ்ச்சை முன்வைத்து பிரதமர் மோடியை விளாசுகின்றனர் நெட்டிசன்கள்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    பிரதமர் மோடி, தோனியை கோத்துவிட்ட விராட் கோஹ்லி!-வீடியோ

    டெல்லி: கிரிக்கெட் வீரர் கோஹ்லியின் ஃபிட்னஸ் சேலஞ்ச்சை பிரதமர் மோடி ஒப்புக் கொண்டதை முன்வைத்து கேள்விக் கணைகளால் நெட்டிசன்கள் அவரை துளைத்தெடுத்து வருகின்றனர்.

    ஃபிட் இந்தியா என்பது மோடி தொடங்கி வைத்த இயக்கம். மான் கீ பாத் நிகழ்ச்சிக்காக வானொலியில் பேசும்போது ஃபிட் இந்தியா குறித்தும் பேசினார் மோடி.

    இதனைத் தொடர்ந்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ரத்தோர், உடல்களை ஃபிட் ஆக வைத்திருப்பது தொடர்பான வீடியோக்களை பகிருங்கள் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் தந்த கோஹ்லி, தாம் இந்த சேலஞ்ச்சை ஏற்பதாகவும் பிரதமர் மோடியும் இதை ஏற்க வேண்டும் என அவரது ட்விட்டர் கணக்குக்கு டேக் செய்தார்.

    இந்த சவாலை ஏற்கிறேன் என பிரதமர் மோடியும் பதிலளித்திருந்தார். கடந்த 2 நாட்களாக இந்த சேலஞ்ச்தான் நாடு முழுவதும் பெரும் அரசியல் விவாதப் பொருளாக உருவெடுத்திருக்கிறது.

    இத்தனை ஃபிட் தேவை

    மோடியின் ட்விட்டர் பக்கத்தில் @MrsNair47 என்பவர், நீங்கள் எங்களது ஜிம் இன்ஸ்ட்ரக்டர் இல்லை.. உங்களது ஹெல்த் அட்வைஸ் எங்களுக்கு தேவை இல்லை. ஒரு பிரதமராக உங்களது கடமையை செய்யுங்கள்; நாங்கள் விரும்புவது ஃபிட் எக்கானமி, ஃபிட் சமூக கட்டமைப்பு, ஃபிட் வங்கிகள், ஃபிட் சேமிப்புகள், ஃபிட் கல்வி என பட்டியலிட்டுள்ளார்.

    சுர்ஜிவாலா காட்டம்

    காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுர்ஜிவாலா தமது ட்விட்டர் பக்கத்தில், பெட்ரோல் டீசல் விலையை குறைத்து சாமானிய மனிதர்களுக்கு பொருத்தமான பொருளாதாரத்தை மீட்பதிலும் 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துங்கள் என குட்டியுள்ளார்.

    தூத்துக்குடி படுகொலை மவுனம் கலையுமா

    இடதுசாரி சிந்தனையாளரான கவிதா கிருஷ்ணன், ஃபிட்னெஸ் சேலஞ்ச்சை ஒப்புக் கொண்ட பிரதமர் மோடி அவர்களே, தூத்துக்குடி படுகொலை குறித்த மவுனத்தை உடையுங்கள். பொய்களை அவிழ்த்துவிடுவதை நிறுத்துங்கள். வேலை வாய்ப்புகளை உருவாக்குங்கள், விவசாயிகளை பாதுகாக்க வேண்டும், பலாத்கார குற்றவாளிகளை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற மக்களின் சேலஞ்ச்சுகளையும் ஒப்புக் கொள்ளுங்கள் என சாடியுள்ளார்.

    நாட்டு நிலைமை இதுதான்

    மாணவர் காங்கிரஸின் ஜிதேந்திர சைன், பெட்ரோல் விலை உயர்வால் சாமானியன் இருசக்கர வாகனத்தை தலையில் சுமந்து செல்லும் கார்ட்டூனை பகிர்ந்து நாடு இப்படியான நிலையில் இருக்கும்போதுதான்தான் ஃபிட்னெஸ் சேலஞ்ச்சை ஏற்றுக் கொள்கிறார் பிரதமர் என சாடியுள்ளார்.

    English summary
    Netizens slammed PM Modi over the accepting the Fitness Challenge.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X