For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடுத்தகட்ட அரசியல் நகர்வு.. அமித் ஷாவை ரகசியமாக சந்தித்தாரா ரஜினி?

டெல்லி சென்ற நடிகர் ரஜினிகாந்த், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை சந்தித்தாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி சென்ற நடிகர் ரஜினிகாந்த், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை சந்தித்தாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் இன்னும் அரசியலில் தீவிரமாக ஈடுபடவில்லை என்றுதான் கூறவேண்டும். தான் கட்சி தொடங்க போவதாக அறிவித்ததோடு அவரது அரசியல் பயணம் முன்னேறாமல் இருக்கிறது.

இந்த நிலையில் அவர் பாஜக கட்சியுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாக ஏற்கனவே பல முறை கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் பாஜகவுடன் கூட்டணி வைக்க போகிறார் என்றும் கூட கூறப்பட்டது. தற்போது ரஜினியின் டெல்லி பயணத்தால் இந்த சந்தேகம் வலுத்துள்ளது.

அமித் ஷாவை சந்தித்தார்?

அமித் ஷாவை சந்தித்தார்?

நடிகர் ரஜினி காந்த் நேற்று அதிகாலை டெல்லி சென்றார். டெல்லி சென்ற அவர் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை ரகசியமாக சந்தித்தாக கூறப்படுகிறது. அமித் ஷாவுடன் அவரும் சில பாஜக நிர்வாகிகளும் ரகசியமாக சந்தித்து பேசினார்கள் என்று கூறப்படுகிறது.

ஊடகங்கள்

ஊடகங்கள்

வடஇந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டு இருக்கிறது. அவர் அமித் ஷாவை சந்தித்ததாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை என்றும் தகவல்கள் கசிந்தது. அதேபோல் இந்த சந்திப்பு எதற்காக என்று வடஇந்திய ஊடகங்கள் கட்டுரை வெளியிட்டு இருந்தது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை

அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை

அதில், ரஜினி தமிழ்நாட்டில் தனி கட்சி தொடங்கி பாஜகவுடன் கூட்டணி வைக்க இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு கூட்டணி கிசுகிசுக்கள், வடஇந்திய ஊடகங்களில் செய்தியாக வெளியாகி இருந்தது. ஆனால் இப்போது வரை இந்த சந்திப்பு குறித்து அறிவிப்பு எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

விளக்கம் அளித்துள்ளனர்

விளக்கம் அளித்துள்ளனர்

இந்தநிலையில் ரஜினியின் டெல்லி பயணத்தில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை என்று மட்டும் ரஜினி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் செய்தித் தொடர்பாளர் அகமது, ரஜினியின் பயணத்தில் அரசியல் நோக்கம் இல்லை என்றுள்ளார். ஆனால் அமித் ஷாவுடன் சந்திப்பு நடந்ததா என்று விளக்கம் அளிக்கவில்லை.

English summary
New Alliance Plan: North Indian media says that Rajini met BJP head, Amit Shah in his residence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X