For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அந்தக் கடைக்கு போங்க.. இந்த வார்த்தையை சொல்லுங்க.. ப்ரீயா சிக்கன் லெக் பீஸ் கிடைக்கும்!

பாகிஸ்தான் ஒழிக என்று சொன்னால் ஒரு கடைசியில் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

ராய்ப்பூர்: அந்த கடைக்கு நேரா போங்க.. இந்த வார்த்தையை மட்டும் சொல்லுங்க.. உடனே ஒரு சிக்கன் லெக் பீஸ் ஃப்ரீயா தருவாங்க! இப்படித்தான் சத்தீஷ்கர் முழுவதும் பரபரப்பு பேச்சாக உள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் கடந்த 14 ந்தேதி தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த கொடூர தாக்குதலுக்கு நாடு முழுவதும் கடுமையான கண்டனமும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. இதையடுத்து உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு பல்வேறு தரப்பினர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள்.

கடையடைப்பு

கடையடைப்பு

டெல்லியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் தங்களுடைய ஒரு நாள் ஊதியத்தை வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்குவதாக அறிவித்திருந்தனர். அதேபோல கோவாவில் வாழும் காஷ்மீரிகள் தங்களின் கடைகளை ஒருநாள் முழுவதும் அடைத்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

நூதன அறிவிப்பு

நூதன அறிவிப்பு

அந்த வகையில் சத்தீஷ்கர் மாநிலம் ஜெக்தல்பூரில் ஒரு நூதன தள்ளுபடி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது ஒரு தள்ளுபடி வண்டிகடை. அந்த கடையின் ஓனர் அஞ்சல்சிங் என்பவர்.

லெக் பீஸ்

லெக் பீஸ்

இவர், கடைக்கு வரும் கஸ்டமர்கள் பாகிஸ்தான் ஒழிக என்று சொன்னலால் சிக்கன் லெக் பீஸில் 10 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என்று வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மதித்தது கிடையாது

மதித்தது கிடையாது

இதுகுறித்து கூறிய கடை உரிமையாளர் அஞ்சல் சிங் சொல்லும்போது, ''மனித நேயத்தை பாகிஸ்தான் என்னைக்குமே மதித்தது கிடையாது. இனிமேலும் உணர போவது கிடையாது. அமைதியை நிலைநாட்ட அந்த நாடு எந்த முயற்சியையும் மேற்கொள்வதில்லை. அதனால் எல்லோரும் தங்களின் அடி மனசில் இருந்து 'பாகிஸ்தான் ஒழிக' என்று சொல்ல வேண்டும்'' என்றார்.

English summary
Man offers Rs.10 off on Chicken leg piece chicken leg piece for saying Pakistan Murdabad in Chhattisgarh food stall
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X