For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது புதுசு.. முதல்முறையாக பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு வானிலை முன்னறிவிப்பு வெளியிட்ட இந்தியா

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: முதல்முறையாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு வானிலை முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.ஜம்மு காஷ்மீர், லடாக்குடன், கில்ஜிட், பால்டிஸ்தான் மற்றும் முசபராபாத்துக்கும் வானிலை முன்னறிவிப்பு இன்று முதல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நீக்கியது.. அப்போது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 புதிய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு திருத்தப்பட்ட புதிய இந்திய வரைபடத்தை வெளியிட்டிருந்தது. அதில் லடாக் யூனியன் பிரதேசத்தில் லே, கார்கில் மாவட்டங்கள் இடம்பெற்றது. இதில் கார்கில் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் கில்ஜிட் பால்டிஸ்தான் பகுதிகள் இடம்பெற்றது.

இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதிகளை மத்திய அரசு கைப்பற்ற போவதாகதகவல்கள் வெளியானது. ஆனால் மத்திய அரசு அப்படி ஒரு திட்டம் இப்போதைக்கு இல்லை என்று விளக்கம் அளித்தது.

கில்ஜிட் - பால்டிஸ்தானில் தேர்தல்

கில்ஜிட் - பால்டிஸ்தானில் தேர்தல்

இந்நிலையில் கில்ஜிட் - பால்டிஸ்தான் பகுதிகளில் பொதுத் தேர்தல்களை நடத்தலாம் என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 30 ந்தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு மத்திய அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். .கில்ஜிட்-பால்டிஸ்தானில் தற்போதைய அரசின் பதவிக்காலம் ஜூன் 24 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

உரிமை இல்லை

உரிமை இல்லை

இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கில்ஜிட், பால்டிஸ்தான் உள்ளிட்ட அனைத்து காஷ்மீரின் பகுதிகளும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அங்கு பாகிஸ்தானுக்கு எந்த ஒரு உரிமையும் இல்லை என்றும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் உடனே வெளியேற வேண்டும் என்று கடந்த 4 நாட்களுக்கு முன்பு கூறியது.

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்

இந்நிலையில் வடமேற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் நுட்பமாக சில மாறுதல்களை நடைமுறைப்படுத்தி உள்ளது. இதன்படி முதல்முறையாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், லடாக்குடன், கில்ஜிட், பால்டிஸ்தான் மற்றும் முசபராபாத்துக்கும் வானிலை முன்னறிவிப்பை தெரிவித்துள்ளது.

முசபராபாத்தில் மழை

முசபராபாத்தில் மழை

கில்ஜிட், பால்டிஸ்தான் மற்றும் முசபராபாத் பகுதிகள் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த முன்னறிவிப்பு உள்ளது. அந்த வானிலை முன்னறிவிப்பின் படி ஜம்மு காஷ்மீர், லடாக்குடன், கில்ஜிட், பால்டிஸ்தான் மற்றும் முசபராபாத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
India Meteorological Department has started referring to its meteorological sub-division of Jammu and Kashmir as “Jammu & Kashmir, Ladakh, Gilgit-Baltistan and Muzaffarabad”. Muzaffarabad is part of Pakistan-occupied Kashmir while Gilgit-Baltistan is also under illegal Pakistani occupation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X