For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பதவியேற்ற கையோடு கமல்நாத் அதிரடி.. மத்திய பிரதேசத்தில் விவசாய கடன்கள் தள்ளுபடி!

மத்திய பிரதேசத்தில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பதவியேற்ற கையோடு கமல்நாத் , விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார்-வீடியோ

    போபால்: மத்திய பிரதேசத்தில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் இன்றுதான் பதவி ஏற்றார். 72 வயது நிரம்பிய கமல்நாத் நீண்ட காலமாக அரசியலில் இருக்கிறார்.

    மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை காங்கிரஸ் ஒவ்வொன்றாக நிறைவேற்ற தொடங்கியுள்ளது.

    பெரிய பிரச்சனை

    பெரிய பிரச்சனை

    இந்த வருடம் முழுக்கவே விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக விவசாயிகள், மஹாராஷ்டிரா விவசாயிகள் என்று தனி தனியாக போராட்டம் நடத்தினார்கள். அதோடு மொத்தமாக எல்லா மாநில விவசாயிகளும் சேர்ந்து டெல்லியிலும் போராடினார்கள். தங்கள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினார்கள்.

    தேர்தலில் பெரிதாக எதிரொலித்தது

    தேர்தலில் பெரிதாக எதிரொலித்தது

    இதனால் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் விவசாய பிரச்சனை முக்கியமானதாக பார்க்கப்பட்டது. தேர்தல் முடிவிலும் இந்த போராட்டம் எதிரொலித்தது. இதன் காரணமாகவே 5 மாநில தேர்தலில் 3 மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக அனைத்து மாநிலத்திலும் மோசமாக தோல்வியை தழுவி இருக்கிறது.

    கடன்கள் தள்ளுபடி

    கடன்கள் தள்ளுபடி

    இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முதல்வராக பதவியேற்ற கையோடு அம்மாநில முதல்வர் கமல்நாத் அதிரடியாக கடன்களை தள்ளுபடி செய்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போதே விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது காங்கிரஸ். அதேபோல் ரூ.2 லட்சம் வரையிலான கடன்கள் முதற்கட்டமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    பாஜகக் கட்டாயம்

    பாஜகக் கட்டாயம்

    இந்த நிலையில் பாஜகவிற்கு தற்போது விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு பாஜக சென்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் இந்த விவசாய கடன் பிரச்சனை பெரிதாக எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    ஒன்னு ஓவர்

    இதுகுறித்து டிவீட் போட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதல் வாக்குறுதி முடிந்து விட்டது. 2வது, அடுத்து என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    New CM Kamal Nath made it as Congress said in the Election campaign, Waives off Farmers loan up to Rs.2 lakh in Madhya Pradesh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X