For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காசி விஸ்வநாதர் கோவிலில் கருவறைக்குள் சென்று வழிபாடு செய்ய உடை கட்டுப்பாடுகள் அமல்!

Google Oneindia Tamil News

வாரணாசி: உத்தரப்பிரதேசத்தின் காசியில் உள்ள புகழ்பெற்ற விஸ்வநாதர் கோவிலில் கருவறைக்குள் சென்று வழிபாடு செய்வதற்கு உடை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

காசி விஸ்வநாதர் கோவிலில் கருவறைக்குள் சென்று லிங்க வடிவிலான மூலவரை தொட்டு வழிபாடு செய்ய முடியும். அப்படி லிங்கத்தை தொட்டு வழிபடும்போது அபிஷேக நீரை பக்தர்கள் தாங்களே எடுத்து தலையில் தெளித்து கொள்வர்.

இதில் கடந்த ஆகஸ்ட் மாதம் மாற்றம் கொண்டுவரப்பட்டது. கருவறையில் லிங்கத்தை 3 அடி தொலைவில் நின்றுதான் வழிபாடு நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

நித்யானந்தா சிஷ்யைகள் வெளியிட்ட பரபர புது வீடியோ.. ஒரே பயமா இருக்கு.. ஜனார்த்தன சர்மா அதிர்ச்சிநித்யானந்தா சிஷ்யைகள் வெளியிட்ட பரபர புது வீடியோ.. ஒரே பயமா இருக்கு.. ஜனார்த்தன சர்மா அதிர்ச்சி

விவிஐபிக்களுக்கு அனுமதி

விவிஐபிக்களுக்கு அனுமதி

ஆனால் விவிஐபிக்கள் கருவறைக்குள் அமர்ந்து பூஜை செய்வதற்கான அனுமதி தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கருவறைக்குள் நுழையும் பக்தர்களுக்கு தற்போது உடை கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

காசி வித்வத் பரிஷத்

காசி வித்வத் பரிஷத்

இது தொடர்பாக உத்தரப்பிரதேச சுற்றுலா அமைச்சர் டாக்டர் நீல்கந்த் திவாரி தலைமையில் காசி வித்வத் பரிஷத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சமஸ்கிருத வல்லுநர்கள், வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டனர்.

இப்படி போக கூடாது

இப்படி போக கூடாது

பேராசிரியர் ராமச்சந்திர பாண்டே உள்ளிட்ட இதர உறுப்பினர்கள் அனைவரும் உடைகட்டுப்பாடுகளை கொண்டுவருவது என முடிவு செய்துள்ளனர். இதன்படி பேண்ட், டிஷர்ட், ஜீன்ஸ் அணிந்து கொண்டு கருவறைக்குள் சென்று மூலவரை தரிசிக்க முடியாது.

காசி உடை கட்டுப்பாடுகள்

காசி உடை கட்டுப்பாடுகள்

வேட்டி குர்தா அணிந்த ஆண்கள், சேலை அணிந்த பெண்கள் மட்டுமே கருவறைக்குள் சென்று 3 அடி தொலைவில் நின்று மூலவரை தரிசிக்க முடியும். மேலும் மூலவரை தரிசிக்கும் நேரத்தை முற்பகல் 11 மணி வரை நீட்டிக்கவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 அர்ச்சகர்களுக்கும் உடை

அர்ச்சகர்களுக்கும் உடை

அதேபோல் கோவில் அர்ச்சகர்களுக்கும் உடைகட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. நெரிசலான நேரங்களில் அர்ச்சகர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் இந்த உடை மாற்றம் கொண்டுவரப்படுகிறது.

கோவிலில் வேத மையம்

கோவிலில் வேத மையம்

அத்துடன் காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் வேத மையம் ஒன்றும் அமைக்கப்படும். இந்த மையத்துடன் கணிணி, ஆங்கிலம் கற்பிக்கும் துணை மையம் ஒன்றும் அர்ச்சகர்களுக்காக செயல்படும் என்றார் அமைச்சர் நீல்கந்த் திவாரி,.

English summary
Kashi Vishwanath Temple in Varanasi has decided to implement a dress code for devotees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X