For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனி ரயில் பயணிகளுக்கு 2 நிமிடத்தில் சுவையான உணவு கிடைக்கும்

By Karthikeyan
Google Oneindia Tamil News

மதுரா: ரயில்களில் பயணம் செய்வோருக்கு 2 நிமிடங்களில் சூடான சுவையான உணவுகளை வழங்கும் புதிய திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

தற்போது நீண்ட தூரம் பயணம் செய்யும் ரயில் பயணிகளின் வசதிக்காக பாஸ்ட் புட் வகைகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்த திட்டத்தின் படி நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகள் தங்களுக்கு விருப்பமான பாஸ்ட்புட் வகை உணவுகளை மொபைல் ஆப்ஸ் மூலம் ஆர்டர் செய்து விரைவாக பெற்றுக்கொள்ளலாம்.

 New Food Delivery On Trains

தங்கள் இருக்கை எண்ணைக் குறிப்பிட்டு பயணிகள் தங்களுக்குப் பிடித்தமான உணவை ஆர்டர் செய்தால், ரயில் நிலையங்களில் ரயில் நிற்கும்போது 2 நிமிடங்களில் அவர்கள் இருக்கும் இடத்திற்கே உணவு வந்துவிடும். பீட்சா உள்ளிட்ட உணவு வகைகளையும் ஆர்டர் செய்துகொள்ளலாம்.

மேலும், மக்கள் அதிகம் வந்து செல்லும் வழித்தடங்களில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களுக்கு உணவு கொண்டுவர தனியார் உணவகங்களுடன் ரயில்வே ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தி சூடான உணவுகளை ஆர்டர் செய்து உண்டு மகிழ்ந்தனர்.

இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக தனியார் உணவு விடுதிகள் ரெயில் நிலையங்களில் உணவுகளை சமைத்து சூடாக பயணிகளுக்கு விநியோகம் செய்ய ஸ்பேஸ் கிச்சன் என்ற திட்டம் கொண்டுவரப்பட உள்ளது.

English summary
Passengers on India's vast railway network have long complained of the terrible meals on offer to sustain them on long journeys, but a slew of new services bringing fast food to their seats is changing the way they dine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X