For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நியூ ஹாரிஸான்ஸ் விண்கலத்தை ‘டூடுள்’ போட்டுக் கெளரவித்த கூகுள்

Google Oneindia Tamil News

டெல்லி: கூகுள் இணையதளம், நாசாவின் நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம் இன்று ப்ளூட்டோ கிரகத்தைக் கடக்கவிருக்கும் நிகழ்வைக் கெளரவிக்கும் வகையில் டூடுள் ஒன்றைப் போட்டுள்ளது.

குள்ள கிரகம் என்று ஒதுக்க வைக்கப்பட்டுள்ள ப்ளூட்டோ கிரகத்தின் பல முக்கியத் தகவல்களை, உண்மைகளை பூமி இன்னும் சில மணி நேரங்களில் அறியவுள்ளது. இது தொடர்பாக உலகம் முழுவதும் விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள் மட்டுமல்லாமல் சாதாரண மக்களும் கூட பெரும் ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்த நிலையில் நியூ ஹாரிஸான்ஸ் விண்கலத்தைக் கெளரவிக்கும் வகையில் கூகுள் இணையதளம் புதிய டூடுள் போட்டுள்ளது.

டூடுள்

டூடுள்

கெவின் லாலின் (Kevin Laughlin) என்பவர் இதை உருவாக்கியுள்ளார். ப்ளூட்டோவை நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம் சுற்றி வருவது போல இந்த டூடுள் அமைக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய விண்கலம்...

மிகப்பெரிய விண்கலம்...

மனிதர்கள் இதுவரை அனுப்பிய விண்கலங்களிலேய மிகப் பெரியது இதுதான். மணிக்கு 31,000 மைல்கள் என்ற வேகத்தில் பூமியிலிருந்து இது ஒன்பதரை ஆண்டு கால பயணத்தை முடித்து இன்று ப்ளூட்டோவை கடக்கிறது.

சாதனை...

சாதனை...

இதுவரை 3 கோடி மைல்கள் தூரத்தை அது கடந்து வந்துள்ளது. இந்த வகையில் மிகப் பெரிய சாதனையையும் நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம் படைத்துள்ளது.

அரிய புகைப்படங்கள்...

அரிய புகைப்படங்கள்...

இதுவரை ப்ளூட்டோ குறித்து நியூ ஹாரிஸான்ஸ் எடுத்து அனுப்பியுள்ள புகைப்படங்கள், விண்வெளி கண்டுபிடிப்புகளில் மகத்தானவை என்றும் நாசா வர்ணித்துள்ளது.

கூகுள்...

கூகுள்...

இப்படிப்பட்ட மகத்துவம் பெற்ற நியூ ஹாரிஸான்ஸ் விண்கலத்திற்கு தற்போது கூகுள் டூடுளும் கெளரவம் சேர்த்துள்ளது.

English summary
Tuesday’s Google Doodle, created by Kevin Laughlin, shows a small illustration of the probe spinning around Pluto to honor it’s groundbreaking journey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X