For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரம் 8848.86 மீட்டர்... அடடே வளர்ந்திருச்சா

எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரம் 8848.86 மீட்டர் அதனை அளவிட்ட சீனாவும் நேபாளமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

Google Oneindia Tamil News

காத்மண்டு: உலகின் மிக உயர்ந்த மலைச்சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் உயரம் 8 ஆயிரத்து 848 மீட்டர் என்று இதுவரை அறியப்பட்டிருக்கிறது. 2015 ஆம் ஆண்டில் நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு பிறகு எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறைந்திருக்கலாம் என்ற சந்தேகம் நேபாளத்திற்கு வந்தது. சீனாவும் இதே சந்தேகத்தை எழுப்பியது. இந்த நிலையில் தற்போது எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848.86 மீட்டர் என்று அளவிட்டுள்ளனர்.

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவெரெஸ்டின் உயரம் என்ன எனக் கேட்டால் நாம் அனைவரும் 8,848 மீட்டர் என உடனே சொல்லி விடுவோம். ஆனால் நேபாளம் மற்றும் சீன அரசுகளுக்கு இதில் உடன்பாடில்லை. எனவே எவெரெஸ்டின் உயரம் குறித்து ஒரு வருடமாக அளவீடு நடத்திய பின்னர், நேபாளம் நாளை புதிதாக அளவிடப்பட்ட எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அறிவிக்க உள்ளதாக கூறியுள்ளது.

New height of Mount Everest is 8848.86 metres China, Nepal jointly announce

இதனால் எவரெஸ்ட் சிகரத்தினை மீண்டும் அளவிட வேண்டுமென்று சீனாவும், நேபாளமும் முடிவெடுத்தது. கடந்த 2019ம் ஆண்டில் சீன அதிபர் ஜிஜின்பிங்கின் நேபாள பயணத்தில் இரண்டு நாடுகளும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இதனால் எவரெஸ்ட் சிகரத்தினை மீண்டும் அளவிட வேண்டுமென்று சீனாவும், நேபாளமும் முடிவெடுத்தது. கடந்த 2019ம் ஆண்டில் சீன அதிபர் ஜிஜின்பிங்கின் நேபாள பயணத்தில் இரண்டு நாடுகளும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

நேபாளத்தை உலுக்கிய 2015 பூகம்பத்திற்குப் பிறகு 8,848 மீட்டர் உயரம் உண்மையான நீளமாக இருக்காது என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊகங்களுக்குப் பிறகு உலகின் மிக உயரமான சிகரத்தின் உயரத்தை அளவிட நேபாளம் முயன்றது. மலையின் உயரத்தை மீண்டும் அளவிட நேபாள அதிகாரிகள் மற்றும் நிபுணர்களை நியமிக்கும் அதே வேளையில், சீனாவும் திபெத்திய பக்கத்திலிருந்து உயரத்தை அளவிடும் பணியைத் தொடங்கியது.

அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் ஒரு அழைப்பை அனுப்பிய கணக்கெடுப்புத் துறை, புதிய உயரத்தை அறிவிக்க திட்டமிடப்பட்ட நிகழ்வு குறித்து முறையான அழைப்பை வெளியிட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் எங்கள் அலுவலகத்தில் புதிய உயரத்தை அறிவிக்கும் திட்டத்தை நாங்கள் வழங்கவுள்ளோம். இந்த நடைமுறையில் தீவிரமாக பங்கேற்றவர்களும் இந்நிகழ்ச்சியில் பாராட்டப்பட உள்ளனர் என்று இமயமலை ஆய்வுத் துறையின் துணை இயக்குநர் ஜெனரல் சுஷில் நர்சிங் ராஜ்பந்தாரி நேற்று தெரிவித்திருந்தார்..

எவரெஸ்டின் உயரம் 8848 மீட்டர் என்று 1954ம் ஆண்டில் சர்வே ஆப் இந்தியா அறிவித்த நிலையில், தற்போது 2020ம் ஆண்டில் சீனாவும், நேபாளமும் இணைந்து எவரெஸ்டின் புதிய உயரத்தை அறிவித்துள்ளன.

நேபாளமும். சீனாவும் எடுத்த அளவுகளை கொண்டு இன்று இரு நாடுகளும் இணைந்து எவரெஸ்ட்டின் உண்மையான உயரத்தை அறிவித்துள்ளன. இதற்காக அறிவிப்பை இமயமலை ஆய்வுத்துறையின் துணை இயக்குநர் ஜெனரல் சுஷில் நர்சிங் ராஜ்பந்தாரி வெளியிட்டுள்ளார். எவரெஸ்டின் புதிய உயரம் இனி 8848.86 மீட்டர் ஆகும்.

கடந்த சில ஆண்டுகாலமாகவே எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறைந்திருக்கலாமோ என்ற விவாதங்களுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பூகம்பத்தால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறைந்திருக்கலாம் என்று பேசப்பட்ட நிலையில் முன்பிருந்ததை விட .86 மீட்டர் உயரம் கூடுதலாகவே இருக்கிறது. ஒருவேளை எவரெஸ்ட் வளர்ந்திருக்குமோ?

English summary
Mount Everest, the world's highest peak, is 8,848 meters high. Nepal suspects that the height of Mount Everest may have dropped after the 2015 earthquake in Nepal. China raised the same suspicion. At this point, the current height of Mount Everest is 8848.86 meters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X