For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய வடிவில் மீண்டும் கலக்க வரும் "நோக்கியா" மொபைல்கள் !! ஜூனில் விற்பனைக்கு வருகிறது

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: நோக்கியா மொபைல் போன்களின் இந்திய வெளியீடு சார்ந்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

மொபைல் போன்களை மக்களுக்கு அறிமுகம் செய்ததே நோக்கியா நிறுவனம் என்று கூறலாம். ஆரம்பகாலத்தில் பலவித மாடல்களில் வெளிவந்து கொண்டிருந்த நோக்கியா, பின்னர் புதிய நிறுவனங்களின் போட்டிகள், மற்றும் ஆண்ட்ராய்டுக்கு பதிலாக விண்டோஸ் ஓஎஸ் தேர்வு ஆகியவை அந்த நிறுவனத்தை பாதாளத்திற்கு தள்ளிவிட்டது. இருப்பினும் நோக்கியா போன்களை யாரும் சாதரணாக மறக்க முடியாது.

New Nokia 3310 to be available for sale in India soon

தற்போது மீண்டும் வரப்பிரசாதமாக ஸ்மார்ட்போன் மட்டுமின்றி தனது பழைய மாடலான நோக்கியா 3310 மாடல் போனையும் மீண்டும் சந்தைக்கு கொண்டு வர நோக்கியா முடிவு செய்துள்ளதாம். அதன்படி புதிய நோக்கியா போன்கள் ஜூன் மாதம் இந்தியாவில் வெளியிடப்படும் என எச்எம்டி குளோபல் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நோக்கியா 3310, நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 மொபைல் போன்கள் முதற்கட்டமாக ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்பட்டு அதன்பின் ஆன்லைனில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 3310:

இந்த நோக்கியா 3310, முன்பு வந்த மாதிரியே வரப்போவதில்லை. இப்போதைய டெக்னாலஜியுடன் இணைந்துதான் வரவுள்ளது. குறிப்பாக இந்த போனில் 4G, LET மற்றும் VoLTe ஆகியவை உள்பட தற்கால பல டெக்னாலஜி அம்சங்கள் இதில் உள்ளது.

நோக்கியா 3:

5.0 இன்ச் 1280x720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ், இத்துடன் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர், 2ஜிபி ரேம் உள்ளது. 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் இத்துடன் கூகுள் டிரைவ் வசதியும் வழங்கப்படுகிறது.

8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா டிஸ்ப்ளே பிளாஷ், மைக்ரோ யுஎஸ்பி, யுஎஸ்பி ஓடிஜி, ப்ளூடூத், வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், 2560 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும் இதில் உள்ளது.

நோக்கியா 5:

5.2 இன்ச் 1280 x 720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 2ஜிபி ரேம் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா, மைக்ரோ யுஎஸ்பி, யுஎஸ்பி ஓடிஜி, ப்ளூடூத், வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும் இதில் உள்ளது.

நோக்கியா 6:

5.5 இன்ச் 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட், மற்ற நிறங்கள் கொண்ட மாடல்களில் 3 ஜிபி ரேமும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்டோன் எல்இடி பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ யுஎஸ்பி, யுஎஸ்பி ஓடிஜி, ப்ளூடூத், வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

English summary
Nokia 3310 is expected to be launched at the MWC 2017 when the smartphone s are ruling the market.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X