For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகாத்மா காந்தி எப்படி கொல்லப்பட்டார்... மொத்தமாக மீண்டும் விசாரணை செய்யப்படுகிறதா ?

மகாத்மா காந்தியின் மரணத்தைப் பற்றி மீண்டும் விசாரிக்க கோரிய வழக்கை ஆய்வு செய்ய அமரேந்திர சரண் என்ற வழக்கறிஞரை நியமித்துள்ளது உச்சநீதிமன்றம்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி : மகாத்மா காந்தியின் மரணத்தைப் பற்றி மீண்டும் விசாரிக்க கோரிய வழக்கை ஆய்வு செய்ய அமரேந்திர சரண் என்ற வழக்கறிஞரை நியமித்துள்ளது உச்ச நீதிமன்றம். டாக்டர். பங்கஜ் பாண்டீஸ் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் , இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளது.

நாதுராம் கோட்சேவால் 1948 ஜனவரி மாதம் 30-ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார் மகாத்மா காந்தி. இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இந்த மரணத்தைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று டாக்டர். பங்கஜ் பாண்டீஸ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

New probe in gandhi assassination.... court will check for the possibility !

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கு குறித்து நீதிபதிகள் விரிவான சில கருத்துக்களை தெரிவித்துள்ளனர். முதலாவதாக வழக்கு தொடுத்த டாக்டர். பங்கஜ் பாண்டீஸ்க்கு நன்றி தெரிவித்த நீதிபதிகள் , உங்களது இந்த ஆர்வத்துக்கும் , உண்மையை கண்டுபிடிக்க விரும்பும் குறிக்கோளுக்கும் மிக்க நன்றி. ஆனால் மறுவிசாரணை குறித்து அவ்வளவு எளிதாக முடிவெடுத்துவிட முடியாது" என்று கூறினார்.

அப்போது வழக்கு தொடுத்த டாக்டர். பங்கஜ் பாண்டீஸ் தரப்பு வழக்கறிஞர், மகாத்மா காந்தியின் மீது 4 குண்டுகள் பாய்ந்து இறந்துள்ளார், 3 குண்டுகள் பாய்ந்ததாக மட்டுமே கணக்கு காட்டப்பட்டுள்ளது. அந்த நான்காவது குண்டு எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்க குழு அமைக்க வேண்டும் " என்று வாதிட்டார். மேலும், காந்தி கொலையில் ''போர்ஸ் 136'' என்ற பிரிட்டிஷ் அமைப்பு ஈடுபட்டிருக்கலாம் ' என்றும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.

டாக்டர். பங்கஜ் பாண்டீஸ் தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் , காந்தியின் மரணத்தில் மறுவிசாரணை செய்ய தேவை இருக்கிறதா என்பதை ஆராய அமரேந்திர சரண் என்ற மூத்த வழக்கறிஞரை நியமித்தது. இவர் காந்தியின் மரணம் குறித்து மறுவிசாரணை செய்வதற்கான வாய்ப்புகளை ஆராய்வார்.

வழக்கு தொடுத்த டாக்டர். பங்கஜ் பாண்டீஸ் என்பவர் தீவிர இந்து மகா சபா உறுப்பினர் ஆவார். காந்தி கொலையில் தூக்கிலிடப்பட்ட நாதுராம் கோட்ஸேவும் , நாராயண் ஆப்தேவும் இந்து மகா சபையில் உறுப்பினர்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Supreme Court Appoints chief prosecutor amerendar charan as the office to assess new probe into mahatma gandhi's assassination. Also he wanted quick clarification in the new probe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X