For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனி டிவிட்டரில் எல்லோரும் 280 எழுத்துக்கள் வரை பயன்படுத்தலாம்.. வந்துவிட்டது புதிய அப்டேட்

டிவிட்டரின் புதிய அப்டேட்டின் மூலம் இனி நாம் போடும் டிவிட்டுகளில் 280 எழுத்துக்களில் எழுதலாம்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: டிவிட்டரின் புதிய அப்டேட்டின் மூலம் இனி நாம் போடும் டிவிட்டுகளில் 280 எழுத்துக்களில் எழுதலாம். இதன் காரணமாக பழைய 140 எழுத்துக்களுக்குள் டிவிட் எழுத வேண்டும் என்ற கட்டாயம் தளர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது.

டிவிட்டரில் இத்தனை காலமாக எந்த டிவிட்டாக இருந்தாலும் 140க்குள் எழுதவேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இதன் காரணமாக பலர் அதிக அளவில் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். 140 எழுத்திற்குள் நினைத்ததை சொல்வது பலருக்கும் கஷ்டமாக இருந்தது.

New update in twitter allows to write in 280 characters

இந்த நிலையில் டிவிட்டரில் விரைவில் இந்த 140 எழுத்திற்குள் எழுத வேண்டும் என்ற வரையறை மாற்றப்படும் என கூறப்பட்டது. ஆனால் அந்த அப்டேட் பல காலமாக வராமலே இருந்தது. இதையடுத்து இந்த செய்தி புரளி என நம்பப்பட்டது.

இந்த நிலையில் தற்போது உண்மையிலேயே இந்த வரையறை மாற்றப்பட்ட அப்டேட் வெளியாகி இருக்கிறது. இதன்படி இனி 140 எழுத்துருக்களுக்கு பதில் 280 எழுத்துக்களில் டிவிட் எழுதலாம். இன்று காலையில் இருந்து பலர் 280 எழுத்துருக்களில் டிவிட் எழுதி வருகின்றனர்.

மேலும் இந்த அப்டேட் வந்த பின் டிவிட்டரில் #280character என்ற ஹேஷ்டேக் வைரல் ஆகி இருக்கிறது. பலரும் இந்த புதிய அப்டேட் குறித்து இந்த டேக்கில் எழுதி வருகின்றனர்.

English summary
Twitter now officially expands its character count to 280. Twitter says we can write in 280 words in any language.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X