For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Just In
Oneindia App Download

"மங்கள்யான்" குறித்து இனவெறி கார்ட்டூன்.. மன்னிப்பு கேட்டது நியூயார்க் டைம்ஸ்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: செவ்வாய்கிரகத்தை ஆராய்வதற்கான இந்தியாவின் மங்கள்யான் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியதை பொறுத்துக் கொள்ள முடியாத அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளேடு தான் இனவெறியுடன் வெளியிட்ட கார்ட்டூனுக்காக தற்போது மன்னிப்பு கோரியுள்ளது.

அமெரிக்காவின் மேவன் விண்கலம், செவ்வாய்கிரகத்தை சென்றடைந்த சில நாட்களிலேயே மிகக் குறைந்த செலவிலான இந்தியாவின் மங்கள்யான் விண்கலமும் செவ்வாய்கிரகத்தை அடைந்து புதிய சரித்திரம் படைத்தது.

Mangalyaan

இதை சகித்துக் கொள்ள முடியாத நியூயார்க் டைம்ஸ் நாளேடு கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டது. அதில், 'பணக்கார நாடுகளின் விண்வெளிக் குழு' என்று பெயரிடப்பட்ட அறை ஒன்றின் வாசல் கதவருகே ஒரு விவசாயி பசுமாட்டுடன் வந்து கதவைத் தட்டுவதுப் போல இந்தியாவை அது சித்தரித்திருந்தது.

இது கடும் சர்ச்சையை கிளப்பியது. சமூக வலைதளங்களில் நியூயார்க் டைம்ஸின் இனவெறிக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Post by The New York Times.

இதனைத் தொடர்ந்து நியூயார்க் டைம்ஸ் ஏட்டின் ஃபேஸ்புக் பக்கத்தில் அப்பத்திரிகை ஆசிரியர் ஆண்ட்ரூ ரோசெந்தால், இந்தக் கார்ட்டூன் விண்வெளி ஆராய்ச்சி என்பது எப்படி பணக்கார மேலை நாடுகளின் கட்டுப்பாட்டில் இனி இல்லை என்பதைக் காட்டவே வரையப்பட்டது என்று கூறி மன்னிப்பைக் கோரியுள்ளார்.

English summary
The New York Times on Monday tendered an apology on Facebook for the racist cartoon they published, ridiculing India's Mangalyaan.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X