For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆதித்யநாத் ஆளும் மாநிலம்னா சும்மாவா? நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களும் காவிமயம்

இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளுக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணிக்கு கான்பூர் மைதானத்தில் வித்தியாசமான முறையில் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களும் காவிமயம்- வீடியோ

    கான்பூர்: இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரை அந்த அணி இந்தியாவிற்கு எதிராக விளையாடி வருகின்றது.

    முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி என ஒருநாளில் தொடரில் சமனில் இருக்கிறது. கான்பூரில் நடக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி மிகவும் முக்கியமான போட்டி என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் ஆகியுள்ளது.

    இந்த நிலையில் உத்தரபிரதேசத்தின் கான்பூர் மைதானத்துக்கு நேற்று பயிற்சிக்காக வந்த நியூசிலாந்து அணி வீரர்களுக்கு வித்தியாசமான முறையில் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. நிறைய சுவாரசியமான சம்பவங்களும் நடந்து இருக்கின்றன.

     ஒருநாள் தொடர்

    ஒருநாள் தொடர்

    கடந்த ஒருவாரமாக நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியாவிற்கு எதிராக விளையாடி வருகின்றது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி என ஒருநாளில் தொடரில் சாமானில் இருக்கிறது. கான்பூரில் நடக்க இருக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியானது இந்த தொடரை தீர்மானிக்கும் போட்டி என்பதால் மிகவும் முக்கியமான போட்டியாக திகழ்கிறது. இதற்காக இரண்டு அணிகளும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

     நியூசிலாந்து வீரர்கள் தீபாவளி கொண்டாட்டம்

    நியூசிலாந்து வீரர்கள் தீபாவளி கொண்டாட்டம்

    இந்த நிலையில் நியூசிலாந்து அணி பயிற்சி மேற்கொள்வதற்காக மூன்றாவது ஒருநாள் போட்டி நடக்க இருக்கு கான்பூர் மைதானத்துக்கு வந்தது. அப்போது அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த ஹோட்டலில் மிகவும் வித்தியாசமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தீபாவளி முடிந்த பின் அவர்கள் வந்ததால், அவர்களுக்கு தீபாவளி பண்டிகை குறித்து விளக்கப்பட்டது. மேலும் ஹோட்டல் முழுக்க அலகரிங்கப்பட்டு நிஜமான தீபாவளியே அங்கு கொண்டாடப்பட்டது.

     நியூசிலாந்துக்கு காவி கலர்

    நியூசிலாந்துக்கு காவி கலர்

    இந்த பண்டிகையில் கலந்து கொண்ட வீரர்கள் அனைவருக்கும் காவி நிறத்தில் துண்டுகளும், உடைகளும் கொடுக்கப்பட்டது. மேலும் பொட்டு, மாலை, பூ என எல்லாம் காவி நிறத்தில் தரப்பட்டது. இதையடுத்து நியூசிலாந்து அணி வீரர்கள் அனைவரும் மினி சாமியார்கள் போலவே காட்சி அளிக்க ஆரம்பித்தனர். 1000க்கும் அதிகமான் விளக்குகள் ஏற்றப்பட்டு அவர்களுக்காக கேக்குகள் வெட்டப்பட்டன.

     நியூசிலாந்தில் ஒரு ராமன்

    நியூசிலாந்தில் ஒரு ராமன்

    அதன்பின் அந்த இடத்தில் சிறிய அளவில் ராமாயண நாடகம் நடத்தப்பட்டது. 12 பள்ளி மாணவர்கள் இணைந்து இந்த ராமாயண நாடகத்தை நடத்தினர். நியூசிலாந்து அணி வீரர்கள் புரியாத இடங்களில் சந்தேகங்கள் கேட்டனர். உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யாநாத் நடத்திய தீபாவளி பண்டிகையை பார்த்து அது போலவே இந்த வரவேற்பை நடத்த முடிவு செய்ததாக ஹோட்டல் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

    English summary
    New Zealand is playing three ODI and three T-20 match series vs India. New Zealand team has received a saffron welcome after they arrived in Kanpur for third one-day match training.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X