For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா குமார், கொரோனா குமாரி.. புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு பெயரிட்ட ஆந்திர மருத்துவர்கள்

Google Oneindia Tamil News

அமராவதி: கொரோனா வைரஸின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா குமார், கொரோனா குமாரி என ஆந்திர தாய்மார்கள் பெயரிட்டுள்ளனர்.

கொரோனாவை ஒழிக்க உலக நாடுகளே போராடி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Newborns in Andhra Pradesh named corona kumar, corona kumari

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் வேம்பள்ளி என்ற கிராமத்தில் இரு நிறைமாத கர்ப்பிணிகள் ரமாதேவி, சசிகலா. இருவரும் கடந்த 4 ஆம் தேதி அங்கிருந்த மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டனர்.

அப்போது அவர்களுக்கு சிசேரியன் மூலம் ஆண், பெண் குழந்தைகள் பிறந்தன. கொரோனா லாக்டவுனில் குழந்தைகள் பிறந்ததால் அவர்களுக்கு கொரோனா குமாரி, கொரோனா குமார் என மருத்துவர்களால் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த பெயர் குறித்து சிசேரியன் செய்த மருத்துவர்கள் கூறுகையில் தற்போது கொரோனா குறித்து அனைவரும் பேசி வருகிறார்கள். வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது நல்ல ஐடியா என எங்களுக்கு தோன்றியது.

இந்த பெயர் குறித்து பெற்றோரிடம் ஆலோசனை செய்தோம். அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். இதையடுத்து அந்த பெயரையே குழந்தைகளுக்கு சூட்டினோம் என்றனர்.

English summary
Newborns in Andhra Pradesh named Corona Kumar and Corona Kumari amid Coronavirus intensifies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X