For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நியூஸ் எக்ஸ் சிஎன்எக்ஸ் எக்ஸிட் போல்.. கர்நாடகாவில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும்!

கர்நாடகாவில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என நியூஸ் எக்ஸ் சிஎன்எக்ஸின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகா: காங்கிரஸ் அதிக இடங்களை பிடிக்கும்..யாருக்கும் பெரும்பான்மை இல்லை- வீடியோ

    பெங்களூரு: கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸை விட பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என நியூஸ் எக்ஸ் சிஎன்எக்ஸின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபையில் 222 தொகுதிகளுக்கு மட்டும் இன்று தேர்தல் நடைபெற்றது. 222 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றுள்ளதால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 112 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

    News X CNX exit polls: BJP gets more seats in Karnataka

    இந்நிலையில் தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி நியூஸ் எக்ஸ் சிஎன்எக்ஸின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி பாஜக 102 முதல் 110 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆளும் காங்கிரஸ் கட்சி 72 முதல் 78 இடங்களில் வெற்றி பெறும். மதசார்பற்ற ஜனதா தளம் 35 முதல் 39 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவை 3 முதல் 5 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

    English summary
    News X CNX TV has released Karnataka assembly election 2018 Exit polls. BJP will get 102- 110 seats, congress will get 72 -78, JDS will get 35-39 seats and others 3-5 seats.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X