For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Breaking news: ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது பசுமைத் தீர்ப்பாயம். ஆனால் இதற்கு வேதாந்தா நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வேறு மாநில நீதிபதியை நியமிக்க வேண்டும் என அது கூறியுள்ளது.

வேதாந்தாவின் கோரிக்கைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக நீதிபதிகள் பாரபட்சமானவர்கள் என வேதாந்தா கூறுகிறதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Newest First Oldest First
6:29 PM, 20 Aug

கேரள வெள்ள பாதிப்பு, அதி தீவிர பேரிடர்: மத்திய அரசு அறிவிப்பு

கேரள அரசு தகவல்படி 247 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியாகியுள்ளனர்

5:46 PM, 20 Aug

இதய சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தில் ஒரு தொகையை கேரளாவுக்கு அளித்த கரூர் சிறுமி

இதய ஆபரேஷனுக்கு நன்கொடையாக கிடைத்த 20 ஆயிரத்தில் ரூ. 5 ஆயிரத்தை நிதியாக அளித்தார்

கரூர் மாவட்டம் குமரபாளையம் கிராமத்தை சேர்ந்த சிறுமி அக்ஷயா

4:28 PM, 20 Aug

2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என்ற உத்தரவில் கண்டிப்பு காட்ட வேண்டும்-ஹைகோர்ட்

2ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கூடாது என்பதை பத்திரிகை அறிவிப்பாக வெளியிட வேண்டும்

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பாடச்சுமையை குறைக்க கோரிய வழக்கில் ஹைகோர்ட் நீதிபதி கிருபாகரன் உத்தரவு

4:25 PM, 20 Aug

சேலம் நகருக்குள் காட்டெருமை புகுந்தது

கண்ணங்குறிச்சி என்ற பகுதியில் காட்டெருமை புகுந்தது

காட்டெருமையை பார்த்ததும் பொதுமக்கள் பீதியில் ஓட்டம்

2:33 PM, 20 Aug

திருச்சூர் மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியது

வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போட நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை

2:31 PM, 20 Aug

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு

வழக்கை விசாரிக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

நீதிபதி குழு ஆய்வு செய்து ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டும்

2:07 PM, 20 Aug

இலவசமாக நிவாரண பொருட்களை ரயிலில் கொண்டு செல்ல அனுமதி

சுய விளம்பரத்துக்காக 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருச்சி ஜங்ஷனில் இறக்கிவிட்டதாக புகார்

திருவாரூர் சென்ட்ரல் பல்கலைக்கழகத்தில் படிக்கும் கேரள மாணவர்கள் ரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதம்

1:50 PM, 20 Aug

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் வியாழக்கிழமை விசாரணை நிறைவு

3வது நீதிபதி சத்யநாராயணன் முன்னிலையில் விசாரணை நிறைவடைகிறது

1:12 PM, 20 Aug

தர்மபுரியை சேர்ந்த இளவரசன் மர்ம மரணம் குறித்த விசாரணை அறிக்கை தாக்கல்

ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு ஆணையம், முதல்வரிடம் அறிக்கை அளிப்பு

2013ம் ஆண்டு இளவரசன் மர்மமான முறையில் மரணம்

5 வருடங்கள் கழித்து சிங்காரவேலு ஆணையம் அறிக்கை தாக்கல்

12:34 PM, 20 Aug

இந்தியாவில் சிறந்த மாநில முதல்வர் யார்?

இந்தியா டுடே - கார்வி இன்சைட்ஸ் நடத்திய சர்வே வெளியீடு

30% ஆதரவுடன் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி முதலிடம்

நிதிஷ் குமார், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 10% பேர் ஆதரவு

உ.பி முதல்வர் ஆதித்யநாத்திற்கு 9% பேர் ஆதரவு

தமிழ்நாடு, கேரளா முதல்வருக்கு யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை

12:34 PM, 20 Aug

எதிர்க்கட்சிகளின் கூட்டணி ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள தயார்

இந்தியா டுடே - கார்வி இன்சைட்ஸ் நடத்திய சர்வேயில் தகவல்

46% எதிர்க்கட்சிகள் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள தயார் - சர்வே

35% எதிர்க்கட்சிகள் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளவில்லை

19% எதிர்க்கட்சிகள் தேர்தல் நேரத்தில் முடிவு செய்யும் - சர்வே

12:33 PM, 20 Aug

தென் இந்தியாவில் மோடியைவிட ராகுலே பிரபலமானவர்

இந்தியா டுடே - கார்வி இன்சைட்ஸ் நடத்திய சர்வேயில் தகவல்

தென் இந்தியாவில் ராகுல் காந்தி 46% சதவிகிதம் பிரபலமானவர்

தென் இந்தியாவில் மோடி 31% சதவிகிதம் பிரபலமானவர்

வட இந்தியாவில் மோடியே பிரபலமானவர் வட இந்தியாவில் மோடி 56% சதவிகிதம் பிரபலமானவர்

வட இந்தியாவில் ராகுல் காந்தி 19% சதவிகிதம் பிரபலமானவர்

மொத்தமாக மோடி 49% சதவிகிதம் பிரபலமானவர்

ராகுல் காந்தி 27% சதவிகிதம் பிரபலமானவர்

பிரதமர் மோடிக்கான சதவிகிதம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது

12:29 PM, 20 Aug

மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது கேரளா

பல மாவட்டங்களில் மழை நின்றுள்ளது

படிப்படியாக வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது

12:20 PM, 20 Aug

புயல் ராமசந்திரன் கூறியதையே கூறும் வாக்கிய பஞ்சாங்கம்

இந்தியாவின் மைய கடல் பகுதியில் பெருத்த நிலநடுக்கம் ஏற்படும்

நிலநடுக்கத்தால் புயல் ஏற்பட்டு தமிழகம், கரநாடகம், கேரளா ஆகியன வெள்ளத்தில் தத்தளிக்கும்

சென்னையை பலமாக தாக்கும்

பறவையினங்கள் அதிக குளிரால் இறக்க நேரும்

12:20 PM, 20 Aug

கேரளா, கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவிலும் கனமழை

ஆந்திராவின் பல மாவட்டங்களில் கனமழை

கிருஷ்ணா உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம்

பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு - தரைப் பாலங்கள் மூழ்கியதால் அவதி

English summary
Kerala come to normal stage since yesterday as rain comes down and flood is wept away.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X