For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி விவகாரத்தில் வன்முறை: கர்நாடகா, தமிழக அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டதை அடுத்து ஏற்பட்ட வன்முறை தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்திற்கு செப்டம்பர் 20ம் தேதி வரை 12 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து கர்நாடகத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது.

NHRC notice to tamilnadu and karnadaka government

பெங்களுரூ, மைசூரு உள்ளிட்ட முக்கிய நகரில் உள்ள தமிழர்கள் கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டன. தனியார் மற்றும் பொது சொத்துக்களுக்கும் போராட்டக்காரர்கள் சேதம் ஏற்படுத்தினர். வன்முறையின் உச்சத்திற்கே சென்ற வன்முறையாளர்கள் 60க்கும் மேற்பட்ட வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர்.

இந்நிலையில், காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டதை அடுத்து ஏற்பட்ட வன்முறை தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது.

அதில், இந்த விவகாரத்தில் இருமாநில அரசுகளும் ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளது. தனியார் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியவர்களை ஏன் கட்டுப்படுத்தவில்லை எனவும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் என்ன எனவும் கேட்டுள்ளது.

மேலும், வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து 3 நாட்களுக்கு பின்பு தான் கர்நாடக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் ஆணையம் நோட்டீசில் குறிப்பிட்டுள்ளது. 4 வாரத்திற்குள் இரு மாநில தலைமை செயலாளர்கள், டிஜிபிக்கள் அறிக்கை தாக்கல் செய்யவும்

English summary
The National Human Rights Commission on friday issued a notice to tamilnadu and karnadaka government over the issue of cauvery
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X