For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலப்புரம் குண்டு வெடிப்பில் அல்-உம்மா கைவரிசை? விசாரிக்கிறது என்.ஐ.ஏ

By Veera Kumar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் கோர்ட் அருகே நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரிக்க உள்ளது.

மலப்புரம் நீதிமன்றத்தின் வெளியே நேற்று மதியம் சுமார் 1 மணியளவில், நடந்த குண்டு வெடிப்பில் 3 கார்கள் சேதமடைந்தன. நல்லவேளையாக யாருக்கும் ஆபத்து நேரவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாருக்கு, இந்திய மேப், ஒசாமா பின்லேடன் உருவப்படம் அடங்கிய நோட்டு ஒன்று கிடைத்தது. அதில் 'பேஸ் மூவ்மென்ட்' என்று எழுதப்பட்டிருந்தது.

NIA to probe court blast at Mallapuram

ஆந்திராவின் சித்தூர், கர்நாடகாவின் மைசூர் மற்றும் கேரளாவின் கொல்லம் நகரங்களில் இவ்வாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாத இடைவெளியில் நீதிமன்றங்கள் அருகே நடைபெற்ற குண்டு வெடிப்புக்கும், இக்குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இருப்பதை போன்ற தோற்றம் உள்ளது.

கொல்லம் குண்டு வெடிப்பை விசாரித்த கேரள போலீசாருக்கு ஒரு உண்மை தெரியவந்தது. அல்-உம்மா தீவிரவாத இயக்கம்தான் தங்கள் மீதான தடை காரணமாக, பேஸ் மூவ்மென்ட் என பெயரை மாற்றிக்கொண்டுள்ளது என்பதுதான் அது.

இந்நிலையில்தான், என்.ஐ.ஏ மலப்புரம் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. பல மாநிலங்களிலும் ஒரே மாதிரி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் என்.ஐ.ஏ விசாரிப்பதே பொருத்தமாக இருக்கும் என்பதால் அந்த அமைப்பு விசாரணைக்கு எடுத்துள்ளது.

English summary
The National Investigation Agency will probe the explosion that took place outside the court in Mallapuram, Kerala on Tuesday. The blast was claimed by a group called the Base Movement. The NIA has been called in for the probe as there were similar explosions that took place in Andhra Pradesh, Kerala and Karnataka in the past couple of months.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X