For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் வங்கி கணக்கு, வெப்சைட் முடக்கம்: என்.ஐ.ஏ தடாலடி கடிதம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு, தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த, ஜாகீர் நாயக்கின் போதனையால், தீவிரவாத செயல்களுக்கு ஊக்கம் பெற்று தாக்குதல் நடத்தியதாக வங்கதேச நாட்டில் குண்டு வெடிப்பு தொடர்பாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்திருந்ததை தொடர்ந்து, ஜாகிர் நாயக் மீது தனது பார்வையை திருப்பியுள்ளது இந்திய பாதுகாப்பு துறையின் அத்தனை அமைப்புகளும்.

NIA writes to banks asking them to freeze accounts of Zakir Naik

ஜாகிர் நாயக்கிற்கு எதிரான பாதுகாப்பு அமைப்பினரின் நடவடிக்கைகளுக்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையலி், ஜாகிர் நாயக் மற்றும் அவரது என்.ஜி.ஓவிற்கு சொந்தமான 17 இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கடந்த சில தினங்களில் பல சோதனைகளை நடத்தி சில ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத ஆதரவாளருக்கு ஜாகிர் நாயக் அமைப்பு, பண உதவி செய்ததாகவும் என்.ஐ.ஏ குற்றம் சாட்டியிருந்தது. இந்த நிலையில், வங்கிகளுக்கு என்.ஐ.ஏ ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதன்படி, ஜாகிர் நாயக் வங்கி கணக்குகளை முடக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஜாகிர் நாயக்கின் ஆன்லைன் செயல்பாடுகளை தடுக்கும் நோக்கில் அவரின் வெப்சைட்டை முடக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு என்.ஐ.ஏ சிபாரிசு செய்துள்ளது.

English summary
NIA writes to banks asking them to freeze accounts of Islamic Research Foundation and Zakir Naik.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X